4 Aug 1999

சாதனையின் சிகரங்கள் ஆகிவிட்ட பெண்...


பெண் என்பவள் பூ போன்றவள்
அவள் பார்வை பொருளே
பாராட்டும் பொருள் அல்ல
ஆக்கிப் போடவும் அழகு பார்க்கவும்
ஆண்களால் ஆளப்பட்டவள் - அவள்
அச்சம் மடம் நாணம் பயிற்பு எனும்
வெற்றிலக்கிய நயங்களில் இருப்பவள்
விழிகளில் மை தீட்டி
உதட்டிற்கு சாயம் எழுப்பி
காணும் இடமெல்லாம்
காட்சி பொருளாக கண்ட உலகில்
இன்று.....



பெண் என்பவள் புயலாவாள்
கண்ட பகைவன்
செருக்களத்தில் செய்வது தெரியாது
சிதறி நின்றான்
தாலி எனும் வேலி சுமந்த கழுத்தினில்
சயனைட்” எனும் சாவை சுமக்கிறாள்
அகப்பை ஒன்றே கருவியாக இருந்தவள்
அசர வைக்கும் கருவி படைக்கிறாள்
குழந்தை தரும் இயந்திரம் இவள்
ஏவுகணை தாங்கும் பெண்குளம் அகிவிட்டாள்
சமையற் கூடமும் கொல்லை புறமுமே
தெரிந்த இவள்
சந்திரனில் வாழ வழி தேடுகிறாள்



அன்ன நடை நடந்து
குனிந்த தலை நிமிராது
கூப்பிட்ட இடத்திற்கு
கூட ஓடிப் போகும் இவள்
விண் உலகம் ஏறி
விண்கலம் எனும் விநோத பொருளுடன்
ஊர்கூடி அழைத்தாலும்
எட்டாத தொலைவினில்
கூடி வாழ குடிமனை பார்க்கிறாள்


இருந்தும் என்ன

பெண் விடுதலை
விரல்கள் தாண்டா
பெண்கள் வாழ்வில் மட்டுமே
ஆண்கள் எனும்
ஆளும் வர்க்கமே
தாங்கள் வாழ தடை எனும்
பெண்னே
புரிந்து கொள் அறிந்து கொள்
உனக்கு நீயே எதிரி என்று











ஊர் பேசும் உலகம் பேசும் என்றிராது
ஊரை மாற்று உலகை மாற்று
என்று வந்தாள்
உனை விட உயர்ந்தது
உலகினில் வேறு இல்லை
மாலதி எனும் வீரப் பெண்
இட்ட விதை
கற்பனை எட்டாத
கரும்புலி ஆக வளர்ந்துள்ளது
பல் வேறு பரிமாணத்தில்
பாரினில் பாவைகளின்
பார்வையில் பதிந்து விட்ட
புரட்சி பெண்கள் ஈழத்தில்
படர்வதை பெண்னே உணர்ந்திடு








போதாதா என்று பெருமை வேண்டாம்
மாலதி போன்ற ஆயிரம் பெண்கள்
தோன்றிடவும் மாண்டிடவும்
கணவன் எனும் உறவு சுமந்து
வாழ்க்கை எனும் பள்ளியில் நுழைந்த
பண்பாட்டு சின்னங்களை சிதைத்ததும்
பாசமறியா பச்சிளம் பாலகர்
தோன்றிடவும் தேம்பி அழுதிடவும்
காரணம் கூட
சந்திரிக்கா” எனும் சர்வாதிகார பெண்ணே
சரித்திரத்தை மாற்றி வரும்
பெண்ணினத்தை
சாக்கடைக்கு தள்ளி போகும்
அபாயம் இங்கு மட்டுமா
இலலையம்மா
பார் போற்றும் பாரதமும்
சிக்கித் தவிப்பது இவள் போன்ற
பெண்களிடமே
ஆக்கவும் முடியும்
அழிக்கவும் முடியம்
என்றிராதே
அது உண்ணையும் அழக்கும்
அதிசய சக்தி
பார்த்து நட பெண்ணினமே



04/08/99 அன்று வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலால் உறுவானது....அனால் 05/08/99 அன்று அது கரும்பலி தாக்குதல் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டது





No comments: