28 Jun 1999

தங்கை அபிராமிக்கு....


இரத்தத்தால் இணைந்திடா
னம் ஒன்றே இணைத்திட்ட - என்
இனிய தங்கைக்கு
இந்த அண்ணனின்
அன்பு மடல்......


அன்பின் தங்கை அபிராமிக்கு....



மை தீட்டி ஒளியூட்டி
அழகு என்ற அணிகலன் பூட்டி
காண்பவர் கண்கள் எல்லாம்
காணாது போய்விட
கண்டிட ஆயிரம் கண்கள்
வேண்டிய உன் கண்
செந்தனலாக சிவந்து அழுவது ஏனடியோ


உன் பூ முகத்தை காண்பவர் எல்லாம்
ண்ணீராய் கலங்கிட
அவர் முகத்தை - உன்
ண்ணீரால் கழுவினாயே
ஏனடி

பயங்கர வாதமும் பள்ளி மாணவரும்
என்ற தலைப்பினில்
பாடம் புகண்டிடும் பள்ளியில்
ஒலி வாங்கி நீட்டி உங்கள்
பாலைவன பயணங்களில்
பட்ட வேதனைகளை வினா வாக்கிய
வேளை தனில் - உன் வதனம்
தீ இட்ட தாமரையாய்
கருகியது நான் அறிந்தேன்

வசந்தங்கள் பாடி,
காதலித்து
கல கலப்பாய்
கால நதியின் ஓட்டத்தில்
நீந்தி விளையாடி
மகிழ்ந்து வாழ வேண்டிய
வயதினில் - உங்கள்
நெஞ்சங்களில் தான்
எத்தனை எத்தனை சோகங்கள்

தாய் இழந்து,
தந்தை இழந்து
தமையன் தங்கை தமக்கை - என்ற
உறவிழந்து
உற்ற உறவினர் பிரிந்து
உடன் பிறவா சகோதரமும் பிரிந்து
ஆ...ஓ....என்றால்
ஓடி வந்து அணைத்திடும்
நன்பர்கள் பிரிந்தது
நம் ஊர் ஒற்றை பனையாய்
நின்ற உன் வாழ்வை
நானறிந்து மெய் அதிர்ந்து தான்
போனேன்......
என் தங்கையே கலங்காதே நீ
உன் கண்கள் கலங்கிட
இங்கு பல நெஞ்சங்கள் தீ யிடம்
அவர்கள் எல்லாம்
உன் உறவுகள் தாயே

பகைவனை அழித்திட
படைதிரள்வது தான் ஒரு வழியல்ல
பாடங்கள் கற்று
பரந்த அறிவு கொண்டு
பார் போற்றும் பருவ மங்கையாய்
வளர்ந்து
பட்டங்கள் பல பெற்று
பாரினில் நீ சிறந்து
நோய் என்று உன்வாசல் வரும்
பாமரர் நோய் பசி போக்கி
பாரினில் சிறந்த ஈழமாமய்
எம் ஈழ நாட்டை
சிறந்திட நீ செய்தால்
திட்டங்கள் பல தீட்டி
படு குழிகள் பல தோண்டி
எம் மக்களை புசித்திட நினைக்கும்
இரத்த வெறி பிசாசுகளின்
கண்களில் மண் துா விடுவாய் நீ



கல்விக்கு போராட்டம் காப்பரன்
போராட்டத்திற்கு கல்வி காப்பரன்

என்ற தலைவன் வழிதனில் - நான்
காப்பரன் தனில் இருப்பேன் - நீ
உன் கல்வி தொடர்ந்திட

வருந்தாதே இனியும்....



இப்படிக்கு உன் அண்ணன்
....................................






27/06/1999 அன்று 1999 ம் ஆண்டு தை மாத இதழ் 65 ஒளிவீச்சில் பள்ளி மாணவர்களில் செல்வி.அபிராமி என்ற மாணவியின் கண்ணீரால் கலங்கிய எனது தோழனின் நினைவில் நான் வரைந்தது இது..





No comments: