31 Jan 2014

வறட்சி


வற்றிப் போன நதிக்கரையின் ஓரங்கள்
இலேசாக தழும்பத் தொடங்கின
துளிர் விட்டெழும்பவே
தத்தி தடவி மண்ணின் துளைதேடி 
நகர்ந்தது விழுதுகள்
எங்கெங்கோ அலைந்து திரிந்த
நீர்ப்பறவைகள் 
இடம் மாறி 
அந்த குளத்தின் ஓரத்தில்
குந்த ஒரு இடம் தேடி 
ஒதுங்கிக் கொண்டன
இயற்கையில் 
மாற்றங்கள் தோன்றுமென நம்பி
ஏமாந்த உள்ளம் தனக்குள் 
சமாதான கீதம் பாடிக் கொண்டது
காணல் நீரின் தோற்றத்தில்
ஏமாந்தெழுந்த அதன் விழிகள்
மீண்டும் தொடரப் போகும்
வரட்சிக்கு
தன்னை தயார்படுத்திக் கொண்டது.

31 May 2013

கோபத்தின் மடியில்....


மேகங்கள் தீண்டி
மின்னல்கள் தெறிப்பது போல்
எந்தன் வார்த்தைகள் மோதும்
வன்முறைக்கு ..
தீர்வொன்று வேண்டும் ,

கண்ணீர் மழையங்கே
காணிக்கையாகுவது போல்
உந்தன் மடி மீது - நான்
தலைசாய்ந்து ...
பழி தீர்க்க வேண்டும் .

26 May 2013

வாழ்தல் ..


எனக்கான உலகம் அது
ஒத்து வாழ்வதிலும் - உங்களுடன்
ஒதுங்கி வாழ்தல் எனக்கழகு

28 Apr 2013

துரோகம்


நான் ..,
கைது செய்யப்படாத வரை - என்
விரலின் நகக் கண்கள் வழி

10 Mar 2013

நினைவுகளுடன்..



இது கதையல்ல !
நிஜம்,
கனவல்ல !
ஓர் காவியம்.
நீருக்கும் நிலவுக்கும் மட்டுமே தெரிந்த
இரகசியம் .

3 Mar 2013

அன்புள்ள நண்பனுக்கு ..



அவர்கள் அந்த மண்ணில் வீழும் வரை
அது அவர்களுடையதாகவே இருந்தது
அவர்கள் மரணங்களின் பின்னால் - அது
அவன் பாதங்களின் கீழ் - அவர்கள்
உடலை தாங்கும் புதை குழிகளானது..

கைகளில் அகப்படாத கடிதங்களாய் பல கதைகள்
அங்கே புதையுண்டு போயிருக்கும்
நாளைய தேடலில் உடலின் எச்சங்கள்
உக்கியே மறைந்தாலும்
உணர்வுள்ள கடிதங்கள் நிச்சயம்
அவர்கள் வரலாறு சொல்லும்....

1 Mar 2013

விடுதலை ....!


விடுதலைக்கு....
வேர்களைக் கொடுத்து
விழுதுகள் இன்றி - வாடி
வீழ்கின்றது
ஆல மரங்கள்.

28 Jan 2013

ஏக்கங்கள்...


நிமிடங்களாச்சும் அவள் மடியில்
துாங்கி எழ தலை சாயும்
என் தோள்கள் வலுக்கூடி
அவள் கரங்களை சுமக்க ஏங்கும்
விரல்கள் அவள் தொடுகைக்கும்
விழிகள் அவள் வருகைக்குமாய்
தவிக்கும் ....

இதழ் விரித்த மலராக
புன்னகை பூத்த உதடுகள் விரித்து
‘‘ அன்பே ” எனக் கூவும்
உன் அழைப்பிற்காய்
நிமிடங்கள் மணிகளாக
நாட்கள் சேர்ந்து வருடங்களாய்
காத்திருப்பேனடி
என்.......

26 Jan 2013

விலங்கு...


இந்த அடிமை சங்கிலி மட்டும்
சற்றே பெறுமதி வாய்ந்தது
சாட்சிக்கு நான்கு சூழ்ந்திருக்க
தங்கத்தில் விலங்கின் கை பூட்டப்படும்
கைதொழுதே தன் அடிமை விலங்கை 
ஏற்பாள் பெண்....


30 Dec 2012

அன்பு ...


கரம் கொடுத்தேன் நீ துாங்க
நீ வரம் கொடு நான் துாங்க
நீ விழி மூடும் நேரமங்கு - நான்
விழி திறந்து காத்திருப்பேன்
கொஞ்சம் மாற்றித் தான் பார்ப்போமே
மானமா போய்விடும் என்ன ..;)