17 Aug 2009



நேற்று நீ வாழ்வு கிழித்து
கசக்கி போட்டாய் - அவளை
“சருகு” என்று
மூடனே
நீ போட்டது சருகு அல்ல
அது தான் “முளை"

அன்று அவள் உன் வாசல் வந்த போது
எங்கு போனாய்,,,??
யாரை தேடினாய்...??!!
நாயே உனக்கு தெரியுமா

அன்று வந்தது புலி அல்ல
என் தங்கை கிருஷாந்தி என்று
எத்தனை எத்தனை கொடுமைகளை
நீ புரிந்தாய் என் தின்னையில்

என் வீட்டு மல்லிப் பூ என்ன
உன்வீட்டு கொண்டைக்கா பூத்தது
நீ வந்து கசக்கி போட

உறங்கிக் கிடந்த புலியை
உசுப்பி விட்டு பார்த்தாய்
பாயுமா...? என்றா



மடையனே நீ அறிந்த தில்லை
புலி பதுங்கித் தான பாயும் என்று

நேற்று கூட செய்தி வந்தது
இரண்டு தேவதைகள்
உன் வீட்டு திண்னையோரம்
கந்தலாய் கிடந்ததாம்

நீ இன்னும் திருந்த வில்லை
நாங்களும் அதை நம்பவில்லை
நம்பி நம்பி நடுத்தெரு வந்தது
நாடே அறியுமே
இதில் என்ன புது கதை
நான் சொல்ல உனக்கு

உறங்கும் போதும் ஒரு முறை
தட்டிப்பார் உன் தலையனையை
ரோஜா முள் கூட
பழவாங்க காத்திருக்கும்
உன் மூளையை அங்கு

விடிந்தும் நீ
கண் விழிக்க மறுத்திருந்தாள்
புரிந்து கொள்வோம்
மீண்டும் ஒரு பழிவாங்கும் படலம்
உன் வீடுவரை வந்ததாய்

இது முடிந்த போன வரலாறு அல்ல
விடியல் காணும் காவியம்
மீண்டும் ஒருமுறை
சொல்லி போகிறேன்
நீ கசக்கி போட்டது
“சருகு” அல்ல
“முளை” என்று




ankayatkaniyain - kadatkarumpilukal -1">

No comments: