20 Aug 2009

தமிழ் வேந்தன் இராவணன்



நேற்று ஒரு வாதம் கேட்டேன்
தமிழுழகின் தமிழ் அவள் வாயால்
என் வேந்தன் இராவணன் மேல்
வசை பாடும் சொற்பதம் வீச...!!


சுடுமணல் வீழ்ந்த சிறு புழுவாய்
சுருண்டு நான் போனேன்
என் இனமே என் வேந்தனை
வசைபாடும் இழிநிலையா...???

தமிழ் உலகின் தலைமகன் அவன்
தலை நிமிர்ந்து நடந்தான்
தறி கெட்ட ஆரியனின்
நய வஞ்சகத்தால்
களம் நடுவே களப்பலி ஆனான்.

புணை கதைகள் பல கூறி
புழுதிக்குள் புதைத்து விட்டதால்
புழுவாகி போனதா என் இனம்
புலியாகி பாய்ந்ததே என் இனம்.

விவாதத்துள் நுழையும் முன்
நிலையான ஒரு சொல்
சொல்வேன் கேளீர்..

இராமாயனம் உண்மையெனில்
அனுமன் என் முதல் எதிரி..
என் மண் தொட்ட
முதல் எதிரி அவன்,


புனைக் கதை என்றால்
வான்மிகி என் முதல் எதிரி
என் வேந்தனை....
வசை பாடி வைத்ததால்..


தமிழ் உலகின் தொன்மையாம்
ஜம்பெரும் காப்பியங்களை
வீழ்த்தும் சதி கொண்டு
புனைந்து வந்த புராணம்
இந்த இராமாயணம்



தமிழ் வேந்தன் அவன்
சிவத் தொண்டன்..
இசை மடியில் துயில் கொண்ட
இளம் வேங்கை அவன்
நாடாளும் திறம் காண
நாடு கடந்து வந்தவர் பலர்
கடல் வழியே வந்தவர்
கண்குளிரும் ஆட்சி கண்டார்

நான் இதை திரித்து
புடம் போட்டு கூற வில்லை
கூறி சென்றவனே வான்மிகி தான்
ஆட்சி திறம் சொன்னவன்
என் இனத்தை அரக்கன்
என்று சொன்னது ஏனோ..??
செங்கோல் மன்னனை
கொடுங்கோல் வேந்தன்
ஆக்கியதும் ஏனோ...??



யார் ஆட்சி அன்று
செழித்திருந்ததது இங்கு...??!!
இராவணனா..? இராமனா..?

யார் ஆண்டால்
எனக்கென்ன என்று
போகும் மூடனல்ல நான்
தமிழ் தாய் மடி வளர்ந்த
தமிழ் பிள்ளை நான்..
யார் பழி சொன்னாலும்
தாய் பழி போக்கும்
கடமை கொண்ட
தனையன் நான்...

ஆரியனே உன் வாய்
கானகம் வெல்லலாம்
என் தாயகம் வெல்லுமா..?
உன் ஆட்சி வல்லமை தான்
உலகறியும் செய்தி அன்றோ..

மனைக்குள் பகை என்றால்
மன்னன் அடி போகலாம்
அரன் மனைக்குள் பங்கென்றால்
மாக்கள் தான் எங்கு போக

அண்ணனை தம்பி காணகம் தள்ள
மக்களின் நிலை என்ன
மகுடம் தான் அறியுமா ??
பாதணி ஆண்ட போது
பாமரர் பட்ட துன்பம்
பட்டினில் இல்லையே..

கானம் சென்று வந்த நீ
காட்டிய ஆட்சி சொல்லவா...
அடுத்தவன் வசை கூற
கட்டிய மனைவியில்
கலங்கத்தை கண்டவன்
நீ..எங்கே ??
கவர்ந்து வந்தவளை
கை தொடதா
என் வேந்தன் எங்கே ??

சிதையில் இறக்கி
சீதையை தீண்டியவன்
நீ ஒரு பெண்ணடிமை வாதி
என் தேவதை சூர்பனகையை
உறவாட முனைந்த நீ
ஒரு காமுகன்
உண்மையை மறைக்க
என் மகளை அரக்கி ஆக்குவதா..??

போருக்கு அழைக்க
பெண் எடு அல்லது
பொருள் எடு
இது தான் அன்றைய நிலை
தங்கைக்கு பழி திர்க்க
அண்ணன் களம் புகுந்தான்
களம் அழைக்கும் நோக்கோடே
உன் சீதையை கவர்ந்தான்

மஞ்சத்தை நிறைப்ப தென்றால்
மாஞ்சோலைகளில் அவளை
குடிவைப்பான் ஏன்..??

யோசித்த பார்த்தால் தெரியும்
புட்டுகளும் புழுகுக் கதைகளும்

போருக்கு வந்த நீ கூட
நேராக வரவில்லையே
போர் விதிகளை மறைத்து
புறத்தாள் தானே களம் புகுந்தாய்
தமிழ் வேங்கையுடன் களம் மோத
நீ செய்த சூழ்ச்சிகள் நாம் அறிவோம்
அதை வேறு நான் கூற வில்லை
வான்மிகி தான் கூறினான்.

சூழ்ச்சியால் வென்று எம்
சுயத்தை நீ கொன்று விட்டாய்
வென்றது நீ என்பதால்
வரலாறு
நீ சொன்னதாய் ஆனது

உண்மையை மறைக்க
புனைகளை புகுத்தினாய்
இருந்தும் உண்மைகள்
அங்காங்கே வெளிச்சமாய் தெரிகிறது..



இயற்கை மட்டும் அல்ல
வரலாறும் சுழற்சியில் தான்
வரும் என்பார்கள்

உன் வழிதோன்றல்கள் இன்றும்
உன் வழியோ தான்
இரவாணன் வழி வந்த நாம்
இன்றும் அவன் வழியே தான்...

அன்று அரக்கராக
நீ வடித்தாய் வரிகளிலே
இன்று பயங்கர வாதியாக
உன் வழி தோன்றல் வரி வடிக்குது..
இராவணன் வழி வந்தவன்
அவன் வழியே சூழ்ச்சிக்குள்

அன்று ஒரு விபீடணன்
கதிரைக்கு பணிந்தான்
இன்று பல விபீடணன்கள்
கதிரைக்கு அலைகிறார்கள்

ஆனால் உண்மைகள் என்றும்
உறங்குவது இல்லை...
பொய்கள் என்றும்
அரியனை ஏறுவதில்லை...

உண்மைகள் உறைக்க
ஆயிரம் கவிகள்
வரிசையில் உண்டு..
ஆயிர்த்தில ஒன்றாய்
அவர்களில் நான் இருப்பேன்...

1 comment:

Vijay said...

//ஆனால் உண்மைகள் என்றும்
உறங்குவது இல்லை...
பொய்கள் என்றும்
அரியனை ஏறுவதில்லை...//

அருமையான கவிதை மட்டுமல்ல ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய கவிதையிம்கூட... வாழ்த்துக்கள் நண்பா