26 Aug 2009

“நெருப்பாற்றில்” ஒரு நினைவு நாள்....

26.08.1993

கடந்து வந்த பாதையில்
நட்டு வந்த விழுதுகளை
நினைவில் கொள்கிறேன்...

படகேறி நீர் எம்
படகு பயணம் காத்தீர்
பகையழித்து நீர் எம்
பயணத்தில் பாதை தந்தீர்



வரதன் மதன் என்று
நாளிதலில் பார்த்தது தவிர
எதுவும் அறிந்த தில்லை அன்று

வாழ்வே மாறி இன்று
வால் பிடிப்போர் இருக்க..!
கால் இழந்தும் நீங்கள்
பாதை மாறியதில்லை அன்று

மீன்பாடும் தேன் நாட்டில்
வந்துதித்த எங்கள் முத்துக்களே
நீர் பிறந்த ஊர் மட்டும் - அல்ல
உங்கள் கல்லரைகள் கூட
பூதங்களின் ஆட்சியில் தான்



கனவுகள் கலைந்து
நிஜத்தில் வாழ்வதாய்
நம்மில் பலர்
ஒரு மயக்க நிலைக்குள்
இன்று

மதிகள் தான் மயங்கி
மனதில் இன்னும் மொட்டுகளாய்
உங்கள் நினைவு தான்

நெடுந் தொலைவு வந்து விட்டோம்
நினைவுகள் மட்டும்
உங்கள் அருகில்
படுத்துறங்கும் வேளை கூட
பாதி கனவு
விட்ட குறை தான்

கனவாகி போயிடுமோ உங்கள்
நிகழ்கால வாழ்க்கை என்ற
ஒரு உறுத்தல் என்னுள்ளே

பகையழித்து நீர் தந்த
எம் வாழ்வு
பகைக்கு அஞ்சி
பாழாகி போவதா
“ஒரு போதும் நடவாது”

இருக்கும் வரை
உணர்வோடு வாழ்வோம்
இல்லை என்றால்
சருகாகி போகவும் தயார்

நினைவில் நீங்கள் வாழும்
உணர்வுள்ள மனிதர் இன்றும் உண்டு
உணர்வை விற்று
ஜடமாகி வாழ மாட்டோம்

No comments: