13 Aug 2009

எங்கே எங்கள் தேசத்தின் தேவதைகள்...வரலாறு மீண்டும் ஒரு முறை குருதிபடிந்த தனது பேனா முனையால் எழுதி முறித்துப்போட்டது அன்று.

14/08/2006 திங்கட்கிழமை வழமையான ஒரு விடியலாக தான் அந்த மண்ணில் விடிந்தது.இதில் என்ன புதுமை 30 வருடங்களுக்கு மேலாகியும் பழகிப்போகமலா இருந்திருக்கும் அந்த விடிகாலை.

அன்றும் வழமைபோல 7 மணிக்கு தனது காலைக்கடமையை ஆற்றவென கிழம்பியிருந்த 4 கிபீர் மிகை ஒளி வேக விமானங்களும் அந்த மாணவ சிறார்கள் தங்கியிருந்த அந்த செஞ்சோலை சிறார் இல்லம் மீது கண்மூடி திறப்பதற்குள் 4 குண்டுகளையும் வீசிவிட்டு தனது கடமையை செவ்வன செய்துவிட்ட மகிழ்ச்சியுடன் தங்கள் வதிவிடங்களை நோக்கி திரும்பி விட்டிருந்தன.பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த இந்த செஞ்சோலை வளாகம் போரின் கொடூரத்தாள் பெற்றொரை இழந்தும் வாழ்வா தாரங்களை இழந்தவிட்டு தவித்து நின்ற பெண்குழந்தைகளின் புணர்நிர்மானத்திற்காகவும் அவர்களது அறிவு வளர்ச்சிக்காகவும் தலைவர் அவர்களால் 1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும்.


அன்றைய தினம் அங்கு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்கா கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் கல்விவலாய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.

செஞ்சோலை சிறார் இல்லத்தில் மொத்தம் 400 பாடசாலை சிறுமிகள் இருந்தனர்.அன்றைய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 61 ஆகவும் 150 க்கு மேற்ட்ட சிறார்கள் காயமடைந்தும் ஒரு வரலாற்று இரத்தம்பதிவை தமிழர் எம் நெஞ்சங்களில் வரலாறு பதிவு செய்து விட்டு சென்றிருந்தது.இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், ஊடகவியலாளர்களை அழைத்து காலையில் தகவல் தெரிவித்தது. இச்சம்பவம் ஒரு கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் அன்று தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தும்
அவர்களும் இலங்கை அரசு மீதான தங்களது வழமையான ஒப்புக்கு சப்பான கண்டனத்தை மட்டும் வெளியிட்டிருந்தனர்.அதனால் இதன்முலம் ஏதாவது ஒரு பலன் எம்மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா என்றால் இன்று வரை அது பூச்சியமே.,இந்த எதிர்பார்ப்பு தான் இன்று வரை எம்மக்களை ஒரு மனித ஜீவனாக அந்த பூமியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.ஆனால் கடைசியில் எம் கைகளுக்கு கிடைத்தது என்னவோ அழிவுகளும் ஏமாற்றங்களுமே..நடந்து முடிந்த இந்த ஒரு படுகொலை எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறபோகும் அழிவுகளை கோடிட்டு காட்டியிருக்குமே என்றால் அந்த மக்கள் அன்றே தம் முடிவை தேர்ந்தெடுத்து இருப்பார்களோ என்னமோ...?

விடைகான முடியாத இந்த கேள்விகளுடன் இன்னும் எத்தனையோ கேள்விகளுடனுமே தான் ஈழத்தமிழினத்தின் வாழ்க்கை நகர்ந்து கொண்ருக்கின்றது

No comments: