
ஏதாவது எழுது எழுது என்று
அடி மனது அழுது கொண்டிருக்கிறது
எதை மறைக்க எதை எழுத
எழுத்தெல்லாம் நீ யாக தானே
இருந்தாய் அன்று
காலங்களில் தான் மாற்றம் வருமா.?
இல்லை..,!!
மனங்களிலும் மாற்றம் வரும்
என்று காட்டி விட்டாய்
அழுத படி கேட்கிறது விழி
எனக்கு மட்டும்
ஏன் இது வரவில்லை..
மாற்றம் எனக்கு ஒத்து வராதா...??
மாற்றத்தை தேடினால்
அங்கு கூட (ஏ)மாற்றமே தொடர்கிறதே
ஒரு முடிவாய் எழுதி விட்டு இருந்து விட
பல வருட புதையல்களை ஒரு தரம்
கிழறி போட்டேன்
எழுதி வைத்த பல எழுத்துகள்
இன்று மை ஊறி போய் விட்டது
விழி வழி கண்ட பல
இன்று கனவாகி போய் விட்டது
எத்தனை இரவுகள் அழுதிருப்பேன்
எத்தனை இரவுகள் எழுதி யிருப்பேன்
நான் மட்டும் அறிந்த பல
வெளிச்சமாக மேடை வருகிறது
நியாயம் சொல்ல நாலு பேர் இருப்பான்
என்ற ஒரு நம்பிக்கையில்

சொல்லும் போதே கண்கள் பனிக்கிறது
நன்பன் கேட்டதும் துாசி என்று சொல்ல
மனமில்லா கண்ணீர் தான் என்றேன்
காரணம் இல்லாமல்
கண்ணீர் வருவதில்லை
காரணமே நீ தான் என்ற போது
கண்ணீரை அடக்க முடியவில்லை
ஒன்றா இரண்டா
ஓராயிரம் தாழ்களை நிறைத்தவள் நீ
என் கற்பனையில்
ஓராயிரம் தாழ்களை நிறைத்தவள் நீ
நாயே விட்டுத்தொலை என்று
நன்பன் சொன்ன போது கூட
மனது மாற வில்லையே அன்று..!!
இன்று.....???
தெருவெல்லாம் ஓலங்களாய்
நிறைந்திருந்த வேளை
தெருமுனையில் உன வரவுக்காய்
ஊர் கூடி தேர் இழுக்க
அழைப்பு வந்தும்
ஊர் எல்லையில் உனகாக
காவல் நின்றேன்..

காத்திருந்த வேளை
கண்களால் சொல்லியிருந்தால்
காரணத்தை அறிந்திருப்பேன்
நீ புன்னகைத்து தானே சென்றிருந்தாய்
சொல்லியெ தீர்வதென்ற ஒரு முடிவோடு
செம்மண் வீதி வழி நான் வந்த போதே
கண்கள் இருண்டன
கால்கள் கனத்தன
நினைவுகள் பல மறைந்தன
கனவுகள் பல தொலைந்தன
சொர்க்கமாக தெரிந்த பல
நரகமாக தோன்றியது
நரகமென்றி ஒதுக்கி விட்டவை
சொர்க்கமாக தெரிந்தது
காலம் இட்ட கட்டளையை
காரணமாய் காட்டி
காதலை புதைத்து வைத்தேன்
புரிந்திருப்பாய் என்ற ஒரு புரிதலுடன
கால மாற்றத்தாள்
காட்சிகளில் தான் மாற்றம் கண்டேன்
என் கனவுகளில் நீ இருந்ததால்
கனவுகளில் மாற்றமில்லை
கனவுகள் பலிக்கும் என்ற
நம்பிக்கையுடன் காலத்தை
நான் கடந்தேன்
பல தடைகள் தாண்டி
பல வழிகள் மாறி
தொலைத்து விட்ட பல உறுவுகள் தேடி
தெருத் தெருவாய் தேடி வந்தேன்
உன் தெருவோரமும்
நாடி வந்தேன்
தொலைந்துவிட்ட உறவுகளை
இணைத்து வைத்த
விஞ்ஞானமே..!
உன்னையும் காட்டியது
உன் முகவரியையும் காட்டியது..
மனதெல்லாம் ஒரு மகிழ்வோடு
மடல் போட்டேன்
மடல் போட்டேன்
மடல் மடலாகவே
திரும்பி வந்தது...
புரிந்து கொண்டேன்
உன்னை நான் புரிந்து
கொண்டேன்..
புரட்சிகர எண்ணத்துடன்
வாழ்வதனால்
சீர்திருத்தங்கள் பல என்னுள்ளே
அதனால் புரிந்து கொண்டேன்
கண்களில் வலி இருப்பதால்
கண்ணீர் வருகிறதே
கண்ணீர் வர காரணம் வேண்டுமா
துாசி விழுந்ததாய்
எண்ணிக் கொள்கிறேன்....
2 comments:
arumayana kavithai... remba unarchipooravamaha varainthirukireerhal... ovoru kaneer thuliyum anupavame anri valiyalla...
அருமை....
Post a Comment