11 Sept 2009

அடைக்கப்பட்ட பெண்ணினம்...!

என் நாட்டு பெண்மையே
எழுந்திரு.....எழுந்திரு...
ஆசையாய் ஒரு கடிதம் - அதில்
ஆயிரம் புதிர் போட்டு

ஆறடி கூந்தலும்
அன்ன நடையும்
பெண்னே உனக்கு அழகு - என்று
ஆயிரம் பேர் சொன்னதுள்
சுயமரியாதை உள்ளவனாய்
சிறிது கூறுகிறேன்
சிந்தித்து பார்...


கருவிலே நீ என்றால்
கண் கலங்கும் இந் நாட்டில்
கண் விழித்தால் - பெண்னே
உனக்கு பூட்டு தயார்

சோலைகளின் நடுவில்
உதித்த உன் வாழ்வில்
உறவு மரம் அறுக்கப்பட்டு
தனிமரம் ஆவாய்

பருவ மாற்றத்தால்
நீ பருவம் அடைய
தோளில் துாக்கி வளர்த்த
ஆண் உறவு தொலைவாக
நிறுத்தி விடும்

காரணம் கேட்டால்
கலாச்சாரம் என்பார்
புனைப் பெயருடன்
புழுகு வேறு

கைகளில் கரியும்
நெஞசினில் தவிப்புமாய்
சுவர் ஓரம் நீ இருந்து
பாட்டி சொல்லும்
புராணங்கள் கேட்பாய்
பள்ளி வாழ்விற்கு
அன்று விழும்
முதல் இடி - மறுநாள்

சடங்கு என்று
ஓர் ஏற்பாடாம்
உன் பெண்மையை
ஊர் அறிய வேண்டும்
ஊர்வலம் போவாய் - உனக்கு
நெஞசம் உறுத்தவில்லை
உறுத்துகிறது எனக்கு
உன் நிலையை எண்ணி


காலங்கள் ஓடும்
கல்யாணம் எனும் புது வரவு
கதவுக்குள் வைத்து
கணவரை காட்டுவர்

இது வேறு பெண்பார்க்கும்
சடங்காம் - அதில்
ஆயிரம் கதை வேறு
ஜாதகம் பார்த்து
சீர் வரிசை பார்த்து
சிலது குறைய
சில்லரை கடண் வேறு

வேலி போட உனக்கு
வேலையில்லா பலர் கூட்டம்
வெள்ளி பாத்திரமும்
தங்க நகையுமாய்
வெட்டவெளியில் உன்
விவேகத்தை விலைபேசுவார்
வேட்டி மடித்து கட்டி
வேடிக்கை பார்ப்பான் - உன்
வீர மணவாளன் - நீயோ
வாயிருந்தும் இல்லா
விட்டில் பூச்சியாய்

தாலி ஏறியதும்
தள்ளி வைப்பார்
பெற்ற உறவை

புதுவாழ்வு என்று நீயும்
புது வீடு புகுவாய் - அங்கு
உனக்கு புழு வாழ்க்கையே


வருடம் ஒன்றானால்
வாரிசு கொடுக்கும்
வரி இல்லா
வருமான இயந்திரம் நீ
தவறி விட்டால்
மலடி எனும்
மலர் மகுடம் வேறு

கை பிடித்தவன் கட்டை ஏறும் வரை
கட்டை எரிக்கும் வேலை உனக்கு
இது வேறு இலக்கணமாம்
கற்புக்கு அரசியாம்

ஈர் எட்டு வயதில் - நீயாக
வைத்த பூ வும் பொட்டும்
இடையில் வந்தவன் - தான்
கொடுத்ததாய் பறித்து போய்விட
கண் கலங்கி நிற்பாய்


வெண் சேலை கொடுத்து
கறை படியா காக்குமாறு
வேறு சொல்வார்கள் - நீயோ
தனி மரமாய் தவிப்பாய்


கண் கெட்ட இவ்வுலகில்
கலாசாலை என்ன
........ பல கண்டாலும்
காப்பாற்றும் கலாச்சாரம் இது
காரி உமிழ வேண்டியவள் நீ
காவலாய் நிக்கிறாய்

உன் கண்ணை திற
எண்ணங்களை ஓடவிடு
சுயமாக தேடலிடு -நீயும்
சுயமரியாதை உள்ளவளாய்
சுதந்திரமாய் வளரலாம்

3 comments:

sumi said...

penkalidathil neengal vaithirukkum karisanaiku thalai vananguhiren.... anal neengal ungalai sutriyulla penkalin valarchihal nahareeka matrangalai parka maranthuvideerhal polum... neengal parithavapadum alavukku penkalin thatpothaya nilai avalavu mosamaha illai...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அடே யப்பா... நல்ல ஒரு சிந்தனை... நீங்கள் ஈழவரா?

எங்க சனம் உங்க வயசுல இப்படி பேசி பார்த்தது இல்ல..

மனதின் கிறுக்கல்கள் said...

நன்றி..உங்கள் கருத்துக்கு,ஈழம் எனது நாடு,போராட்டம் பலரது சிந்தனைகளை புடம்போட்டது..அதில் நானும் ஒருவன்.