26 Sept 2009

கண் திறப்பாய் பெருவெளியே..??!!

சாளரம் திறந்து
பெருவெளியை பார்த்தேன்
ஒளியிழந்து வரண்டு போன-உன்
விழி பார்த்து திகைத்து நின்றேன்..!!!

ஒளியிழந்து வெகு நாளாய்
இருளுக்குள் வாழ்கிறேனோ?
ஒரு கணம் திகைத்து நின்றது
என் மனம்...!!

ஆண்டுகள் பல தாண்டியும்
ஆறாத வேதனை இன்னும்
ஆடிமனதில் ஆயிரம்,
ஆற்றும் வழி எங்கே என்று
பெரு வெளியே உனை நோக்கினேன்

மறு மொழி சொல்ல
வேறு வழியின்றி
பெரு வெளியே நீயும்
ஒளியிழந்த விழி திறந்தாயோ..?
ஒரு மொழியும் புரிய வில்லை
எனக்கு....!!

அன்று ஒரு முறை 1987 இல்..!!

கருவிழி நீ திறந்து
அழுது வடித்த கண்ணீர்
நல்லுார் வெளி வீதியில்
நாம் வடித்த கண்ணீரையும்
மிஞ்சியதா ?
உனை நீயே கேட்டு
விடை சொல்லு பெருவெளியே..?

மீண்டும் ஒரு முறை 2001 இல்...

தீபங்கள் நாம் ஏற்றும் வேளை
தீடீரென நீ அழுதாய்.
திக்கித் திணறி நாம் தவிக்க
தீபங்களின் ஒளிவழியே
தீயாக சுட்டது ஒரு செய்தி
மீண்டும் ஒரு முறை
நீ வடித்த கண்ணீரையும்
மிஞ்சியது எம் கண்ணீர்
மீண்டும்
அதே கேள்வி தான்
விடை சொல்லு பெருவெளியே..??

வீடிழந்த என் இனம்
வாழ் விழந்த என் மொழி
முற்கம்பிகளின் பின்னே
ஒளியிழந்து நிக்குது பார்!

நாம் மீண்டும் அழுது வடிக்க
நீ வற்றி விட்ட
விழிகளூடே பார்ப்பது
புறிகிறது எனக்கு..
இருந்தும் மீண்டும் அதே கேள்வி தான்
விடை சொல்லு பெருவெளியே..??

மௌனித்து மௌனித்து இருந்து
உன் மௌனங்களில்
என் மனம் பொய்த்து போய் விட்டது
பெருவெளியே!!!

யாரையும் இனி நான் நம்ப வில்லை
என் பணி செய்து முடிப்பது ஒன்றே
என் பணி இனி...

இருந்தும் ஓர் நம்பிக்கை
இருக்கிறது என் நெஞ்சில் - எம்
இதயத்தில் வாழும் தீபங்கள் - உன்
விழிகளில் இருப்பார்,

ஒரு நாள் அவர் விழி திறப்பார்
அன்று பெருவெளியே
உம் முன் நாம் தோற்று போவது
உண்மை..

1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

நிஜம் சுடும்...நியாயமான கேள்விகள்...நல்லதொரு கவிதை,,,