1 Nov 2009

உணர்வாளர் சிமானுக்கு ஒரு திறந்த மடல்..

வணக்கம் உணர்வாளர் சீமான் அவர்களே..

உங்கள் உணர்வு பொங்கும் பேச்சுக்களை கேட்டு ஆகா !! இப்படி ஒரு தமிழன் இந்திய மண்ணில் இருந்து செயற்பட்டுப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதே மீண்டும் இனி தமிழன் அங்கு விழித்து கொள்வான் அதற்கு உங்கள் போன்ற சிலர் செயற்பட்டே அகவேண்டும் என்று எண்ணிக் கொண்ட பல ஆயிரம் ஈழதமிழரில் நானும் ஒருவன்.(ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை  இங்கு பயன்படுத்துவதை இட்டு மனவருத்தம் தான்,என்ன செய்யமுடியும் இன்று தமிழன் என்று ஒருவனையும் காணவில்லையே வெறும் எழுத்தில் மட்டும் தெரிகிறது உங்கள் " நாம் தமிழர் " )

ஆனால் அந்த கொடிய இறுதி யுத்தத்தின் பின்னர் நீங்கள் போகும் பாதை மிகவும் புதிராக தெரிகிறது.எவ்வளவு துாரம் உங்கள் செயற்பாட்டை ஆதரித்தோமோ அதே உணர்வோடு உங்களை துாக்கி போடவும் தயாராகி விட்டோம்., இருந்தும் உங்கள் தமிழ் பற்றும் எம் ஈழம் மீதும் உங்களுக்கு இருக்கும் பற்றுக்கும் என்றும் மரியாதை உண்டு, ஆனால் அது கூட எதிர்கால உங்கள்  செயற்பாட்டினை அடுத்து துாக்கி எறியபட்டாளும்  அது ஒன்றும் அதிசயம் அல்ல
முன்பொரு முறை இன்றைய உங்கள் உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத " கொலைஞரும் " ( இது தான் கொடுத்தாகி விட்டதே) , ஜெய் அம்மையாரும் பேசாத பேச்சுக்களையா நீங்கள் இன்று பேசிவிட்டீர்கள்.இன்று அதே வாய்கள் பேசுவதை கேட்க முடிகிறதா..???


அந்த இறுதி யுத்த அழிவின் விழிம்பில் நின்று என் சொந்தங்கள் கதறியபோதும் யாருமே அந்த குரல்களக்காக ஒன்று சேர்ந்தார்களா இல்லையே..? அந்த நொடியில் கூட அனைவரும் (வை.கோ, திருமா,ராமதாஸ்,பாண்டியன்...இன்னும் பல பல வேண்டாம் பட்டியல் மிக பெரிது) தங்கள் சுயநல அரசியல் மீது லாபம் தேடும் செயற்பாடகளில் தான் இருந்தார்களே அன்றி யாரும் ஒன்று சேரவில்லையே..பிறகு என்ன தமிழன் நீங்கள் எல்லாம்.

சரி விடயத்திற்கு வருகிறேன்..

1.இன்று உங்கள் நாம் தமிழர் இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உறுமாற்றம் பெறும் அடையாளங்களை கண்டு கொண்டேன். குறிப்பாக சாதி வெறி பிடித்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை போட்டு உங்கள் அடையாளத்தின் மீது நீங்களே சேற்றை அள்ளி கொட்டி உள்ளீர்கள்.இதை விட

2.நாம் தமிழர் இணைய வட்டம் மூலம் அன்மையில் வெளியாகி கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் அதுவும் உங்கள் இயக்கத்தின்( இன்றுவரை அப்படி தானே சொல்கிறீர்கள் )  இலட்சினையாக நீங்கள் தெரிவு செய்திருக்கும் அந்த " இலட்சனை" பற்றியது.பல்லாயிரம் வீரர்கள் இரத்தம் சிந்தி நம் பல உறவகளின் குறுதியின் மீது உறுவாக்கப்பட்ட அந்த ஈழத்தின் தேசிய சின்னத்தின் மீது உங்கள் அடையாளம் கண்டு துடித்த ஒரு உணர்வுள்ள தமிழன் நான்.

3.நாம் தமிழர் இயக்கமாக தோற்றம்பெற்ற உங்கள் இயக்கம் படிப்படியாக ஒரு அரசியல் கட்சிக்கு உரிய வடிவங்களை எடுத்த வருவதும் அதற்கு ஏற்ப நீங்கள் செயற்பட்டு வருவதும்.

இப்படியாக இன்று உங்கள் செயற்பாடுகள் ஒரு தமிழனாக எம்மத்தியில் உங்களுக்கு இருந்த ஒரு அடையாளத்தை அழித்த வருகிறது. ஈழதமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தால் முதலில் உங்கள் சீமான் என்ற அடையாளத்தை கொண்டு செயற்படுங்கள்,தேசிய தலைமையின் அடையாளத்தை கூட கொண்டு திரிந்து உங்கள் அரசியலிற்கு இலாபம் தேடாதீர்கள்.தேசிய தலைமையை சந்தித்த காலகட்டத்தில் நீங்கள் இந்த புகைப்படங்களை வெளியிட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே அதை விட்டு இன்று அந்த தலைமை மௌனத்தை கடைப்பிடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை சாட்டாக வைத்துக்கொண்டு ஏன் இந்த ஏமாற்று தந்திரம்.

ஒன்றை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடியும்.,அதாவது நீங்கள் ஊறுவாக்க போகின்ற இந்த நாம் தமிழர் இயக்கம் ஏற்கனவே சாதிய அடையாளங்களை கொண்டு பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒருபோதும் ஒன்று சேர்க்க போவதில்லை.இது வெறும் உணர்வுள்ள உங்கள் பேச்சுக்கு நீங்களே தேடிக்கொண்ட ஒரு ரசிகர் வட்டமே ஒழிய உங்கள் அரசியல் முத்திரைக்கு கிடைத்த அங்கீகதரமாக இருக்கப்போவதில்லை.அப்படியே உங்களால் உருவாக்கப்பட்டாலும் உங்கள் இந்த அரசியல் முகம் நாளை உங்கள் ஆட்சிக்கும்,உங்கள் சுயநல தேவைகளுக்கும், முண்டுகொடுக்க நீங்களும் ஏதாவது ஒரு கட்சியின் சாக்கடை அரசியலுக்கு கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்.

எனவே மீண்டும் மீண்டும் இந்த ஈழத்தமிழரது நெஞ்சங்களில் உங்கள் கேடுகெட்ட சுயநல அரசியல் ஈட்டிமுனைகளை கொண்டு குத்தி காயம் செய்யாதீர்கள் என்று மண்றாடி கேட்டுகொள்ளுகிறேன்.

இப்படிக்கு..
நாடற்று நடுத்தெருவில் நிற்கும்
ஒரு ஈழதமிழன்



புலம்பெயர் மக்களுக்கு இந்த பதிவின் மூலம் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.நான் ஒன்றும் பெரிய அரசியல் விற்பனர் அல்ல சாதாரண ஒரு 30 நிறம்பிய இளைஞனே.இருந்தும் எனது கடந்து வந்த பாதைகளில் கண்டுகொண்ட சில அரசியல் ஏமாற்றங்களும் நடந்து முடிந்து விட்ட அந்த கொடிய இறுதி நிமிடங்களின் பின்னர் மீண்டு வந்த ஒரு தமிழச்சியின் இரத்தக்கண்ணீரின் பதிவாக இதை கொடுக்கிறேன்.

இறுதிவரை தன்மக்களுக்காக போராடிய ஒரு வீரனை தலைவனாக ஏற்றுகொண்ட நாங்கள்,அவ்வாறே அந்த தலைவனின் வழி நின்று போராடி இரத்தம் சிந்தி பல உயிர்களை பலியிட்டு நமக்காக உறவாக்கிய அந்த தேசிய சின்னங்களின் மீது நாம் கொண்ட மதிப்பும் மரியாதையையும் இன்று சில உணர்வாளர்களாக அடையாளம் காட்டுவோர் தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.அதில் சீமானும் ஒருவரே என்பது எனது கருத்து.எவரும் எமக்கான விடுதலையை தரப்போவதில்லை.நாமக போராடி பெற்றுக்கொண்டால் ஒழிய அதற்கு வழி கிடைக்கபோவதில்லை.

எனவே இந்த அரசியல் முகமூடி அணிந்த உணர்வாளர்கள் மீதான எமது மோகத்தை தவிர்த்து கொஞ்சம் எமது கரங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைப்போம்.அவர்கள் எமக்கான குரலாக ஒழிப்பதையிட்டு நிறைவு கொள்வதுடன் மட்டும் இருந்து விட்டால் போதும்.எதிர்வரும் நாட்களில் நாம் எமது மாவீரர்களை நினைவுகூறும் நேரங்களில் வழமையாக மேற்கொள்ளும் இந்த உணர்வாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை புறந்தள்ளி அந்த வீரர்களின் தியாகங்களை மதிப்போமாக.

No comments: