17 Oct 2012

மௌனக் காதல்...


கவிதை பேசும் மொழியே உந்தன்
மௌனக் கதவை மூடாதே
இரவைத் தீண்டும் நிலவே நீயும்
மேகத் திரையில் ஒழியாதே

மழை தந்த மேகமாய் என் 
வாழ்வில் கோலம் வரைந்தாய்
வெயில் கோலம் காட்டி இன்று
நெஞ்சில் தாகம் தந்தாய்....

விரலோடு விரல் சேர்த்து நாளை
நெடுந் துாரம் நடக்கலாம்
விடியாத இரவைக் கேட்டு பாயில்
போர்வைத் திரையில் துாங்கலாம்
அணையாத தீபம் ஒன்றை
எந்தன் கையில ஏந்தினேன்
கலங்காமல் காலம் முழுதும்
எந்தன் நெஞ்சில் தாங்குவேன்...

மழை விட்டும் துாறலாய் எந்தன்
மேனி எங்கும் நனைந்தாய்
அலை தள்ளும் நுரைகளாய் இதயக்
கரை மீது படிந்தாய்
ஓடும் நீரை அள்ளி எந்தன்
தாகம் தீர்க்கப் பார்த்தேன்
பருவம் மாறும் போதும் உன்னை
நீராய் எண்ணி காப்பேன்..
( புகைப்பட உதவி - Angela Bella Macario )


1 comment:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கு அருமையான
விளக்கமாய் அமைந்த கவிதையும்
மனம் தொட்டது
தொடர வாழ்த்துக்கள்