2 Oct 2009

தோழன் பூபதி

தாளாட்டும் தாய் மடியே
உன் மடி வீழ்ந்த
வீரர்கள் தான் எத்தனை எத்தனை
கடலோடு போனவர் பலர்
இன்று கண்ணீராய் வருகிறார்

கண்டிருந்தால் அவர்களை - நான்
சொன்னதாய் ஒரு செய்தி சொல் - என்
நினைவுகளில் இன்னும்
நிஜமாக வாழ்வதாய் அவர்

அன்று ஒரு நாள்...

பூபதி அவன் நாமம்
அவனை பார்த்திருந்தால் போதும்
பாதி ஆயுள் புன்னகையுடன் போகும்
புதிரான அவன் வாழ்வை நீ
புதிராக பறித்தது ஏனோ..?!
நள்ளிரவோடு போனவனை
உன் அலைகளில் தேடினோம்

கண்டிருந்தால் கூறும் - என்
நினைவுகளில் இன்னும்
நிஜமாக வாழ்வதாய் அவன்

தாய் முகம் கூட கண்டதில்லை
தாய் மடியாய்
உனை அனைத்த பின்னர்
உண்ண உணவின்றி வாழ்ந்தாலும்
உணை அனைத்து துாங்குவான் அவன்
அலைகளாக நீ தாளாட்ட
ஏனைகளில் உறங்குவதாய்
நினைப்பு அவனுக்கு

நம்பி வந்த பிள்ளைகளை
நடுக்கடலில் பறித்தது ஏனோ.!
உன்மேனி தவழ்ந்தவரை
விண் மேகம் ஆக்கியதேனோ.!

நீண்ட வானமும்
நீல மடியுமாய்
நீ அனைத்து போதும்
ஏற்றபதாய் முடிவு செய்தான்
ஏன் என்றால் விடை சொல்வான்

தாய் மண்ணின் புன்னகை கண்டே
தடம் பதிப்பதாய் உறுதி என்று


புதிரான பாதைகளில் - அவனை
புதிராக பறித்தது ஏனோ
கண்ணீராய் வாடுகிறோம்
சொன்னீரா ஒரு செய்தி..?!

ஆழ்கடல் அன்னையே
ஆழமாய் ஒரு கேள்வி
“பூ பதியை” பறித்தாயே
“பூவுடலை” தான் தந்தாயா..?
புன்னகைத்து போகிறாய்
புரியாதம்மா உன் சிரிப்பு

இருந்தும் பாதுகாத்து கொள்
உன் பிள்ளையை
என் தோழனை
நாளைய வரலாற்றின்
நாயகன் அவன்..

No comments: