15 Oct 2009

புலம் வாழ் என் உறவே..உனக்காக..!!

வற்றி விட்ட கண்ணீர் மேல் நின்று
புன்னகையுடன் எழுதுகிறேன்

புலத்தின் தமிழனே
புரிந்து கொள்
அங்கே
உன் இனம் வாடி நிற்க
இங்கே
நீ வானமா பாக்கிறாய்

யாரை எதிர் பார்த்து
நாளை கழிக்கிறாய்

“ விடுதலை வேர்களைத் தாண்டி
வீரர்கள் வரவேண்டும் என்றா..?? ”

“ தாய் வயிற்றில் பிறந்தவனை
மண் மடியில் உறங்க விடு ”

“ கடல் தாண்டி வந்தவன் நீ
குறல் தன்னும் உயர்த்தி கொடு ”


முள் வேலிக்குள் உன் உறவு
முச்சடங்கி போக
பார்த்திருப்பாயா
இல்லை
தடை உடைத்து
பகைவிரட்டு வேன் என்று
கனவுலகில் வாழ்கின் றாயா..??

அயல் நாட்டு தலைவர்களை
அரை வேட்காடு என்பவனே
துணிந்து சொல்
துன்புற்ற உன் உறவின்
துயர் துடைக்க நீ தயாரா..??
ஓம் என்றால் இன்னும் ஏன்
உன் உறவு உறுக்குளைந்து
வாழ வேண்டும்..?

“ உடைவாள் எடுத்து
உடன் போர் செய் ” என்று
புத்தி கெட்டு பொய் உறைக்க
நான் இல்லை தயாராய்

“ ஓடி ஓடி உன் உறவு அங்கே
ஓரத்தில் உட்கார இடம்மற்றிருக்க ”

உணர்ச்சி வரி வடித்து
உணர்வெழுப்பி போர் முனைக்கு அனுப்ப
நீ ஒன்றும் உணர்வற்ற தமிழன் அல்ல

“ அடுத்த உரை வரும் வரை ”
அடுப்படியில் குந்தியிரா
உனது உறவை ஊர்திருப்ப
உடன் படி தாண்டு

“ வீதிக்கு வீதி
வீட்டுக்கு வீடு
ஓடி ஓடி களைத்தவன்
அழுகிறான் இங்கே ”
எங்கே என்
உணர்வுள்ள தமிழன் என்று

“ தினம் ஒரு செய்தி படித்து
நாக்கூசா நாலு வார்த்தை
திட்டி விட்டு
நாதியற்ற தமிழன் என்று கூறி
நடு வீட்டில் துப்பி வைக்கிறாய் ”

தெரிகிறதா உனக்கு..

ஊர் தாண்டி ஓடி வந்தாய்
வந்த இடத்தில் ஊரை விற்றாய்
கேட்டதற்கு அது சொன்னா தான்
“ உரிமம் ” கிடைக்கும் என்றாய்
கிடைத்ததும்..என்ன சொன்னாய்..

அள்ளி கொடுத்தேன்
கிள்ளி கொடுத்தேன்
அடுத்தவன் செய்யட்டும்
என்றிருந்தாய்

அடுத்தவன் அடுத்தவன் என்று கூறி
உனக்கு நீயே உறவில்லா
அடுத்தவன் ஆகிவிட்டாய்

இன்று கூட
அடுத்தவன் செய்யவே பாத்திருக்கிறாய்

“ என்று நீ செய்வாய் என்று
எதிர்பார்த்து காத்திருக்கு
உன் உறவு
புரிந்து கொண்டு
முதலில் படி தாண்டு

பின்னர் தடை தாண்டலாம் ”

முடிந்ததாய் ஒன்றும் இல்லை
எல்லாம் உறங்கி தான் கிடக்கிறது
நீ முழிக்கும் வரை
எல்லாம் உறங்கி தான் கிடக்கும்

அடுத்தவனை நம்பி அடுப்படியில்
இருந்தது போய்
உன்னை நம்பிய உறவை காக்க
வாசல் படி நீ தாண்டு

“ எதிரி என்று எவனும் இல்லை
இங்கே உனக்கு ”

உனக்கு நீயே
எதிராயக இருக்கும வரை

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

// தினம் ஒரு செய்தி படித்து
நாக்கூசா நாலு வார்த்தை
திட்டி விட்டு
நாதியற்ற தமிழன் என்று கூறி
நடு வீட்டில் துப்பி வைக்கிறாய் ”... Read More
தெரிகிறதா உனக்கு..// புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்களை அப்படியே கூறி இருக்கின்றீர்கள்

உண்மை தான் அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும் அருமையான வரிகள் உணர்வுகளோடு வெளிவந்திருக்கின்றது.

தொடருவோம் ஒவ்வொரு தமிழனின் உணர்வுகளையும் தட்டி எழுப்புவோம்

வாழ்த்துக்கள்

new technology-thayalan said...

அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும்