17 Oct 2009

காதல் நட்பு...



அன்புக்கு மறுபெயர்
காதல் என்றால்
என் அகராதியில்
காதலின் ஒத்த சொல்
நட்பு
அன்பில்லா நட்பு
உன்னது என்றால்
உயிரற்ற உடலை
நீ ஏன் சுமக்கிறாய்..??

உடல் இ்ச்சைக்கு மறு பெயர்
காதல் என்றால்
தீயிட்டு கொழுத்து அந்த
காதலை
வாருங்கள் ஒன்றாக சேர்ந்து
இடித்து போடுவோம்
அந்த காதலின் சின்னங்களை

ஆணுக்கு ஆணும்
பெண்ணிற்கு பெண்ணும்
காட்டும் அன்புக்கு பெயரே
நட்பு என்றால்
எந்த வரையறையுள்
இணைப்பாய் நீ
ஒரு பால் உறவை

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பெண்ணுக்கு ஆணுமாய்
உள் இழுக்கும் உள் ஈர்ப்பை

நட்பும் காதலுமாய்
நீ பிரிப்பதென்றால்
வரையறைக்குள் சிக்காது
என் காதல்


நான் ஆணையும் காதலித்தேன்
ஒரு பெண்னையும் காதலித்தேன்
என் தாயையும் காதலித்தேன்
என் தேசத்தையும் காதலித்தேன்
இன்று உன்னையும் காதலிக்கிறேன்
உன் தமிழையும் காதலிக்கிறேன்
என்னையும் காதலிப்பதால் தான்
இன்றும் நானாக வாழ்கின்றேன்
இதில்
எதில் கோர்ப்பாய் நட்பை
எதை பிரிப்பாய் காதலாய்

நட்பும் காதலும்
இரு விழிகள் இங்கே

ஒரு விழி போதும் என்றால்
உன் வழியில் தெளிவில்லை

இருவிழியும் வேண்டும் என்றால்
என் கைகோர்த்து நட என்னோடு
இருவிழியை கொண்டு
ஒரு வழி நடப்போம்
அழகாக

2 comments:

ஊடகன் said...

என்னுடைய பார்வையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வரும் உறவு ஒருவகையான ஈர்ப்பே தவிர காதல் அல்ல.........

நல்ல இடுகை......... தொடருங்கள்...........

மனதின் கிறுக்கல்கள் said...

நன்றி உங்கள் கருத்துகளுக்கு..நிச்சயம் பதிவுகள் தொடரும்