24 Oct 2009

அவள்..


காற்றில் உன் குழல்
அசைந்தாடக் கண்டு
கார் மேகம் வந்ததாய்
மின்னல் வெட்ட

மின்னல் விழக் கண்ட
மேகம் தன்
இயலாமை கண்டு
கண்ணீர் விட

சிதறி விழும் நீர் துளியில்
என் சின்னவளே நீ நனைய
ரோஜா பூ கூட
இதழ் உதிர்ந்து இறந்தே போனது

பெண்னே..!
உன் அழகில்
இயற்கையே குழம்பிப் போய்விட
இதுவரை பார்த்திருந்த நான்
என்வாகி இருப்பேன்
ஒரு முறை எண்ணிப்பாரடி..?

நிலவுக்குள் உன்
முகம் விழ கண்டு
நினை விழந்து நின்றேன்

பாய்ந்து வரும் அலைகளுள்
பாவை உன் முகம் காண
விழி மூட மறந்து
விறைத்தே நின்றேன்

பார்ப்பவர்கள் என்னை
பைத்தியம் என்ற போதும்
வாய் பேசியதில்லை
உன் வாய் அசைவை
எண்ணிய படி

அதிசயங்களில் ஒன்றாய்
உனை வரைந்தேன் - இன்று
உன் நிழலாய் விழுவது
ஆணாக நான் அல்லவா..!
எப்போதும்..

No comments: