31 Dec 2009

ஏது “ புது ” வருடம்


“ புது வருடம் ”
பிறந்து விட்டது
சொன்னது...
நாட்காட்டி !
எட்டி வந்து வெளியே பார்த்தேன்
மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாய்
“ இயற்கை ” ஒன்றும் சொல்ல வில்லை

அதே வானம் கரிய மேகங்கள் சூழ்ந்து
நீல வண்ண கடல் மௌனமே பதிலாக
குளிர்ந்த தென்றலாய் காற்று கூட மாற்றமின்றி

வாடிய வதனத்துடன்
நாட்குறிப்பில் எழுதுகிறேன்
“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே
எந்த
“ மனிதனும் ” மாற வில்லை

அடக்கு முறையால் அடக்கப்பட்ட
“ சிறு பான்மை ” இனங்கள் எல்லாம்
ஏது
“ புதுவருடம் ” என்று
எதிர் பார்த்து நிற்க

என் தேசத்து சொந்தங்களே

நீங்கள் எதிர் பார்க்கும்
சமாதான பேய்கள்
எட்டி நின்று உதைக்கவே போகின்றது
உங்களை

எழுந்து நீங்கள் அழும் முன்னே
ஒழிந்து நின்று “ போர்முரசு ” செய்யும்
அதனால்
தயாராகவே இருங்கள்

மாற்றங்கள் இன்றி தான்
விடியலும் விடிந்தது - அந்த
சூரியனும் உதித்தது
நாமும் அப்படியே
இருப்போம்

“ தமிழீழம் ” எனும் தேசம் தோன்றி
எம் வீரர் கனவு நனவாகும் வேளை
“ புதுவருடம் ” பிறந்தமதாய்
கல்வெட்டில் நாம் பதிப்போம்
அது வரை எமக்கு
ஏது
“ புது ” வருடம்.

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே
எந்த “ மனிதனும் ” மாற வில்லை

உண்மை தான் இங்கே நிறைய மாற்றங்கள் வந்த போதும் மனிதனின் எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை