19 Dec 2009

வீர நெஞ்சம்



புகைப்படங்களாய் விரியும் சில
வக்கிர கொடுரங்கள் இங்கே
நாளொரு மேனியாக
இணையத்தை வலம் வருகிறது


வீரத்தை நெஞ்சினில் சுமந்த
வீர நெஞ்சங்கள் இங்கே
விழ்ந்து கிடப்பது தான் என்
கண்ணில் தெரிகிறது.


களமுனைக்கு வந்து விட்டால்
அங்கு ஆண் என்ன பெண் என்ன
எனக்கு நீ எதிரி உனக்கு நான் தான் எதிரி
இது ஒன்று தான் களம் அங்கே


இங்கு அதையும் தாண்டி
உங்கள் கைவண்ணத்தில்
சிங்களமே உன் நாகரீகம்
தலைவிரித்து கிடக்கிறது பார்


தாய் மடியில் அன்று
நீயும் தான் பிறந்தாய் இங்கு
நானும் தான் பிறந்தேன்
பார்த்தாயா உன் தாய் மடியை
உன் கை வண்ணத்தில் !!


இது ஒன்றும் எமக்கு புதிதல்ல
புத்தி கெட்டவனே
உனக்கு புரிந்திருக்கும்
ஒன்றுக்கு இரண்டாய் தந்தோம்
பரிசுகளாய் அன்று


மீண்டும் ஒரு முறை பின்நோக்கி பார்


“ வெற்றி நிச்சயம் ” என்று கிழம்பினாய்
பெரிய மடு தன்னில் பொறி கலங்கினாய்
களமுனை தாண்டி வருகையில்
கைவிட்டு வந்த வேங்கைகளை
கண்ணாடி நார்ப்பையில் திருப்பி வைத்தாய்
பிறந்த மேனிகளாய் வந்தவர்களை
தோள் கொடுத்து துாக்கியவள் சொல்கிறாள் கேளு


“ அக்கா உன் ஆடை கலைந்தவனை
தலை கொய்து தாகம் தீர்ப்போம் ” என்றார்கள்
சொல்லில் மட்டுமா இருந்தார்கள் அன்று
இல்லையே
செயலில் கூட தந்தார்களே
ஞாபகம் இல்லையா உனக்கு.!!!
25 க்கு 50 தாக திரும்பி வந்ததை
நீ மறந்திருக்க மாட்டாய் இல்லையா..,??!


அன்று களம் மட்டுமே அறிந்த கதை இது
இன்று களம் இல்லை என்றா படம் காட்டுகிறாய்
என் கண்ணில் கண்ணீர் இல்லை
உன் படம் பார்த்து அழுவதற்கு
அது வற்றி பல ஆண்டு ஆச்சு


இன்று கண்ணீர் விடுபவர்களே கேளுங்கள்
இது யார் போட்ட கோலம் என்று
புலத்திற்கு தானே வந்தீர்கள் - இல்லை
அங்கேயே அனைத்தையும்
புதைத்து விட்டா வந்தீர்கள்
கல்விகள் பல கற்றீர்கள்
கட்டுரைகள் பல வரைந்தீர்கள்


அன்று களமுனையில் நாம்
சொன்ன பதில் அது இருக்க
இன்று புல முனையில்
உங்கள் பதில் என்ன..??????
வெறும் கண்ணீரா..??? - இல்லை
கட்டுரைகளா...????


இது வீரம் விளைந்த மண்
இங்கு வீரர்கள் மட்டும் தான் விளைந்தார்கள்
அவர்கள் மட்டுமே விதையுண்டு போனார்கள்
நீங்கள் வீரர்களாய் இருந்தால்
உங்களுக்கும் எமக்கருகில் ஒர் இடம் உண்டு
இல்லையா
இருக்கும் இடத்திலேயே
புதைந்து போங்கள்
எங்களை பற்றி கவலை வேண்டாம்
நாம் மீண்டும் முளை விடுவோம்
களைகள் எம்மை அழித்து விடாது
இது  வீர நெஞ்சம்..


No comments: