4 Nov 2011

இவர்கள் ''வீரர்கள் ''














கொன்று போட்டது யுத்தங்கள்
உயிர்களை மட்டுமன்று மனித
உணர்வுகளையும் சேர்த்து.
மீளும் நாள் பார்த்து மனம்
மூழ்கிக் கிடக்குது இருளுக்குள்.

எடுத்த ஆயுதங்கள் இரும்பாய்
மனம் இறுகிக் கிடக்குது களத்தில்
முன்னம் எதிரி முழந்தாள் இட்டாலும்
மனம் ஏனோ பயத்தால் முறுகிக் கிடக்கும்
கூப்ப எடுத்த கைகள் சில நொடிகள்
முந்தும் கணமே முந்திக் கொண்டது
விரலின் நுனிகள்

பயம் என்பது வழித்திரையில் மிரள்வது
தெரிந்தும் புரிய மறுக்குது அங்கே
அழிவின் பின்னே ஆனந்தம் என்பது
இருட்டுள் தெரியும் உருவம் போன்றது
ஓப்பாரிகளின் ஓசை இன்றும் கேட்கும்
செவியின் ஓரங்களில் தேசிய கீதமாய்

தோற்றுப் போனவன் பின்னாளில்
துாக்கங்களை நிறைப்பான் இரவில்
கண்ணீர் துளிகளின் உவர்ப்பாய்
அவன் கதைகள் சுவைத்து எறியப்படும்
கடந்து போகும் சுவரில் குருதியின்
சிவப்பு வர்ணங்களால் வரையப்பட்டிருக்கும்
இவர்கள் ''வீரர்கள்'' .

No comments: