23 Oct 2012

நெற்றிப் பொட்டில்...



உன் நெற்றிப் பொட்டில்
என் நிமிடங்கள்
இறுக ஒட்டிக் கொண்டது
விழிகளில் துாக்கங்கள்
கரையக் கரைய
விடிய விடிய ரசிக்கிறேன் என்
இரவிற்குத் துணையாய்


மலை இடுக்கில் சுடர் விட்ட
வெண்ணிலவாய்
இமைகளின் இடையோரம்
உன் நெற்றிக் கண் ..

அநீதிக்கு எதிராய்
புரட்சிக்குத் ‘‘ தீ ” வைக்கும்
தீப்பந்தம் போன்ற(அ)து
உன் விழிகளிற்குச் சுடர் ஏற்றியது ...

அகண்ட வான்வெளியில் ஓர்
வைகரை நிலவாய் உன்
நெற்றிப் பொட்டினில் தோன்ற
என் அடி மனதில் ஒட்டிக் கொண்டாய் ..

வேலைகளை யெல்லாம் ஒதுக்கி வி்ட்டு
உன்னை மட்டும் ரசிக்கிறேன்
என் விரல் தீண்டும் நாட்களுக்காய்
கடிகாரத்தைச் சபிக்கிறேன் ...

குறுகிச் சிரிக்கும் விழிகளும்
பொன்னள்ளிக் கோர்த்த பற்களுமாய்
சிலையாகிக் கொல்ல ,
தவிக்கிறேன்...தவழ்கிறேன் ...
அந்த மழலையாய்.

விதையல் காணா விளைநிலம் மீது
விடியல் கீற்று வந்து வீழ்ந்ததுவாய்
புண்பட்ட மண்ணில் ‘‘நெற்றிப் பொட்டால்”
விதை நெல்லை துாவிச் சென்றாய்
என் காதலியே ...






1 comment:

Yaathoramani.blogspot.com said...

விதை நெல்லை துாவிச் சென்றாய்
என் காதலியே ..

.அருமையான விளைச்சலைக் கண்டு
விதையின் வீரியம் புரிகிறது
மனம்தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்//