19 Mar 2009

அமெரிக்காவின் நண்பன்!பகுதி-04



""வேரித்தாஸ்'' என்பது லத்தீன் மொழிச் சொல். தமிழில் ""உண்மை'' என்று பொருள். தரமான நிகழ்வுகளை பொதுவாகத் தரும் இந்த அனைத்துலக வானொலியின் தனிச்சிறப்பு அரசியல் உரிமைகள், ஆதார மனித உரிமைகளுக்காகவும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற மக்களுக்கு துணையாகவும் போர்க்குரலாகவும் நிற்கின்ற துணிவு. ஆசிய கத்தோலிக்க கிறித்துவ திருச்சபையின் பொதுச்சொத்து இந்த வானொலி நிலையம்.
பர்மாவில் நசுக்கப்படும் கச்சின், கரன் மக்களது குரலாய், ஸ்ரீலங்காவில் பிரேமதாச அரசு ஓயட இடதுசாரிகளை குரூரமாய் அழித்தொழித்தபோது இடதுசாரிகளின் குரலாய், சீனாவில் ஜனநாயக உரிமைகளுக்காய் தலைமறைவாக இயங்கும் அரசியல் உரிமைக் குழுக்களின் குரலாய் -என உண்மை, நீதியின் முழக்கமாய் இயங்கும் எடுத்துக்காட்டான ஓர் வானொலி நிலையம் இது.
1965 முதல் 86 வரை பிலிப்பின்ஸ் நாட்டை தன் சர்வாதி கார இரும்புப்பிடியில் வைத்திருந்த மார்க்கோஸ் -இமெல்டா மார்க்கோஸ் கும்பலின் ராணுவ கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மகத்தான மக்கள் புரட்சி இந்த வேரித்தாஸ் வானொலி நிலையத்திலிருந்துதான் வழிநடத்தி நெறி செய்யப்பட்டது. 1986 பிப்ரவரி 25-ம் நாள் 20 லட்சம் பிலிப்பினோ மக்கள் மார்க் கோசுக்கெதிராய் மணிலா வீதிகளில் திரண்டார்கள். ""வீதிக்கு வரும்போது பாக்கெட் வானொலிகளை உடன் எடுத்து வாருங்கள்'' என மக்கள் புரட்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான கர்தினால்சின் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார். வானொலி வழியாகத்தான் மக்களோடு புரட்சித் தலைவர்கள் பேசினார்கள். வேரித்தாஸ் வானொலி மார்க்கோஸ் ராணுவத்தின் வான்வழி குண்டுவீச்சுக்கு இலக்கானது. எனினும் கருவிகளை ரகசிய இடத்திற்கு நகர்த்தி புரட்சியை வழிநடத்திய பெருமைக்குரிய வானொலி நிலையம் இது.
புரட்சி முடிவுக்கு வந்த தருணத்தின் சில பதிவுகள் சிலிர்க்க வைப்பவை. குறிப்பாக மார்க் கோசுக்கும் அந்நாள் அமெரிக்க அதிபர் ரீகனுக்குமிடையே நடந்த உரையாடல். அமெரிக்காவுக்கு நிரந்தர நண்பர் கள் இல்லை -நிரந்தர சுயநலன்கள் மட்டுமே உண்டு என் பதை மீண்டும் ஒருமுறை கோடிட்டுப் பதிவு செய்த உரையாடல் அது. மார்க்கோஸ் தொலைபேசியில் அமெரிக்க அதிபர் ரீகனிடம் கேட்கிறார். ""மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, வீதியில் இறங்கி நிற்கும் மக்களுக்கெதிராய் ராணுவ நடவடிக்கை எடுப்பதை நீங்கள் அனுமதிப்பீர்களா?'' -அதற்கு ரீகன் சொன்ன பதில் காலச் சிறப்பும், ஒப்பிலா ரசனையும் கொண்டது: ""மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, அமெரிக்கா உங்களை தன் நிலப்பரப்பிற்கு அன்புடன் வரவேற்கிறது. ஙழ்.டழ்ங்ள்ண்க்ங்ய்ற், ஹ்ர்ன் ஹழ்ங் ஜ்ங்ப்ஸ்ரீர்ம்ங் ற்ர் ற்ட்ங் மய்ண்ற்ங்க் நற்ஹற்ங்ள் ர்ச் ஆம்ங்ழ்ண்ஸ்ரீஹ!'' இந்த உரையாடலோடு மார்க் கோஸ் கும்பல் ராணுவ விமானத்தில் அமெரிக்க ஹவாய் தீவுக்குத் தப்பியோடி யது. மக்கள் புரட்சி வென்றது.
இந்த "உண்மையின் குரல்' வேரித்தாஸ் வானொலி எங்கள் ஈழத்து உறவுகளை யும் கைவிடவில்லை. தணிக்கை திரை யிடப்பட்டு எமது மக்கள் தகர்க்கப்பட்ட அந்நாட்களில் தன் வான் அலைகளால் அத்தனை தடைகளையும் தாண்டி அவர்களை அரவணைத்தது.
உன்னதங்கள் புதையுண்டு, உலகத்தின் கருணையுள்ளம் மலடாகி, மரணத்தில் மட்டுமே வாழ்வின் அர்த்தத்தை தேடி நின்ற எமது மக்களுக்கு 5600 கிலோமீட்டருக்கு இப் பாலிருந்து ஆறுதலின் சிறிய நீரூற்றினை வான்வழியே சுமந்து நின்றது.
யுத்தம்... சிதறடித்த குடும்பங் களை இணைத்தது. அவர்களின் ஒப்பாரிகளில் இணைந்தது.
அவலங்களினூடேயும் அம் மக்களின் நொறுங்கிப் போகாத நம்பிக்கைகளை பொத்திப் பொத்திக் காத்தது. 1995-2000 கால கட்டத்தின் ஈழத்து மானுடத் தை விரிவாக சொல்கிறேன்.
(நினைவுகள் சுழலும்)

No comments: