2 Aug 2009

எங்கள் தேசத்தின் புயல்களை திரும்பி பார்க்கிறேன்


இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை.

தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள்.உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும் தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.இந்த மனோபலம் ஒரு வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலைப் போராட்டச் சக்கரத்தை முன்னோக்கித் தள்ளிவிடுவதுடன், வீரம்மிக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட, தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டிவிடுகின்றது.தேச பக்தியையும், வீர உணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால் உலகில் எவராலும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.இப்படியான ஒரு மனஉறதியுடன் எம்முன்னால் வாழ்ந்தவிட்டு சென்ற அந்த வீரர்களின் உண்மையான முகத்தை நாம் அறிய மீண்டும் ஒரு பின்நோக்கிய பாதையை திரும்பிப்பார்ப்பதில் தவறில்லையேகெனடி தலைமையில் ஒரு அணி அன்று பலாலி தளத்தினுள் ஊடுறுவி வெற்றிகரமாக மேற்கொண்ட இந்த வீரமிகு தாக்குதலில் மேஜர்.ஜெயம்மேஜர்.திலகன்கப்டன்.திருகப்டன்.நவரெட்னம்லெப்.ரங்கன்முதலான கரும்புலி வீரர்கள் தம் உயிரை தடைநீக்கும் கொடையாக விட்டச்சென்றுள்ளனர்.தாக்குதலின் பின்னனி1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.இந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.தாக்குதல்கெனடி(நிலவன்)தலைமையில் தாக்குதலுக்கான நகர்வை மேற்கொண்ட அணியினர் வெற்றிகரமாக முதலாவது தடையை ஊடறுத்து மேலும் தளத்தினுள் நகரும் போது தற்செயலாக எதிரியின ரோந்து அணி ஒன்றுடன் ஒரு மோதலில் ஈடுபட தாக்குதல் அணி சிதறவேண்டிய சூழல் ஏள்பட்டது.இருந்தும் நிலமையை உணர்ந்த கெனடி மீதமிருந்த அணியினரை ஒழுங்குபடுத்தி தளத்தினுள் மேலும் முன்னேறி 1994/08/02 அதிகாலை தாக்கதலை தொடங்கினர்.இத்தாக்கதலில் ஒரு பெல் உலங்கு வானுார்தியும் பவல் கவச வாகனமும் அழிக்கப்பட்டது.இந்த தாக்குதலின் முடிவில் வெளியிடப்பட்ட மாவீரர் பெயரில் கெனடியின் மரணம் அறிவிக்கப்பட்டது.ஆனால் 1995 இற்கு பின்னரான காலப்பகுதியில் கெனடி உயிரோடு இருப்பது தெரியவந்து..அதன்பின்னர் 2002 ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலை செய்யப்பட்டார்.இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின்புயல்கள் என்ற பெயரில் ஒரு திரைகாவியம் வெளியிடப்பட்டது.


Get this widget Track details eSnips Social DNA

1 comment:

N Gobinath said...

Kallaraiyil vizhaketri sathiyam seikinrom ungal kanavukalai nanavaakki thodarkinrom. Eelam is our era, has not fallen. Our destination is home, Our destination is a safe home for our next generations.home is always eelam, but It was a mistake we left off a portion of the island for Sinhalese as Sri Lanka. Now we know no foreigners wont let us achieve eelam, nor be patriotic to Sri Lanka. We dont want our children to wonder in the western countries as brown migrants. If we want safe future for our future we wil return to Sri Lanka asap. Participate in Sri Lankan elections, s we can influence the central govt. Our Tamil foreign postal votes will play a key role in elections. We can demand and get any rights on a long run. Our heroes wont be forgotten. Our wealth is built up on their blood.