2 Aug 2009

வரமாக வந்த உறவு



வரமாக வந்த உறவு - இது
உனக்கு சமர்ப்பணம்

இரு வேறு கருவறையில்
நாம் இருந்து வந்தோம்
இரு வேறு தாய் மடியில்
நாம் விழுந்து எழுந்தோம்
கருவறைகள் நம் உறவை
இடை பிரித்தது இல்லை
அந்த தாய் மடிகள் கூட
எம் உறவில் தடை போட்டதில்லை

ஒரு தாயின் மகனாக நான்
இங்கு வந்தேன் - இன்று
இரு தாயின் மகனாக
நான் வாழுகின்றேன்
வரமாக நீங்கள் தந்தது
உறவு என்ற இக் கொடை
மனதார கைமாறாய்
நான் எதை கொடுப்பது சொல்

உயிர் என்ற ஒன்று என்னி்டம்
அதுவும் முற்பதிவில் உள்ளதம்மா
அன்பென்ற ஒன்றை மட்டும்
நான் இங்கு கொண்டு
கைமாறாய் எதை கொடுப்பது
நீயே சொல்லம்மா

அன்பு கொண்டு நீ என்னை
அண்ணா அண்ணா என்று
அழைக்கும் போதெல்லாம் - என்
தாய் மடியில் நான் உறங்கும்
உணர்வம்மா என்னுள்ளே

என்ன தவம் நான் செய்தேன்
உனை எந்தன் தங்கையாக பெற
வரம் ஒன்று வேண்டி வந்தேனா
இல்லை வரம் தரும் கரமாக
நீ இங்கே வந்தாயா

கண்களில் கண்ணீராய் இருந்தவன் - என்
நெஞ்சத்தில் பன்னீராய் நிறைந்து விட்டாய்

மறுபிறவி ஒன்று என்று
இவ் உலகினில் எனக்கிருந்தால்
உனக்கிங்கு தம்பியாக
நான் வரவேண்டும்
உன் கரங்களில் நான் விழுந்து
உன் பாசத்தில் நான் காய வேண்டும்

கோவில்கள் படி ஏறி நான்
நான் வீழ்ந்தது இல்லை ஒருபோதும்
என் தாய் இருக்கும் துணிவுடன்
இன்று உன் அடி வீழ்ந்து
ஒரு வரம் நான் கேட்பேன்
உனக்கு நான் தம்பியாய்
ஒரு பிறவி வேண்டும்

வரிகளில் விடைபெற்று
நான் செல்லுகின்றேன்
உன் கரங்களால் கட்டுப்பட்டு
விடைபெற விரும்பாத மனதோடு
விடைபெறும் அண்ணன் இவன்....

2 comments:

Unknown said...

அண்ணா மிக நீண்ட நாட்களுக்கு பின் இந்த பக்கம் வந்தேன் அது மட்டும் இன்றி இந்த கவிதையை (இல்லை இல்லை) உங்கள் உணர்வுகளை படித்ததும் என்னை அறியாமலே கண்ணீர் விட்டு விட்டேன் ... miss u so much .. come on skype when u free kk...

உங்கள் ஆசை தங்கை ..

Anonymous said...

Miss u anna.sangee.