5 Oct 2009

தொப்புள் கொடி உறவு..

தொப்புள் உறவாக
நாம் உமை சுமந்தோம்
தீயின் கரம் கொண்டு
தீண்டியதேன் எம்மை

வெட்டி வெட்டி எம் உடலில்
வடுக்கள் தான் மிச்சம்
இருந்தும்
தொடர்ந்து நடக்கும்
விடுதலை பயணம் இது

அகிம்சை கரம் கொண்டு
அன்பாய் அழைத்தோம்
அழைத்த குரலை
அழிய விட்டு
அதிகாரம் பேசினாய் நீ
இருந்தும்

பொருத்து கொண்டோம்
தொப்புல் கொடி உறவு
தொடர்வது நல்லது என்று

சுட்ட வடு சுகம் ஆகும் முன்னர்
சுவடு தேடி வந்து
சுவர் இடித்தாய் நீ
தடுத்து பார்க்க
எத்தனை முறை
முயன்றோம்
கேட்டாயா நீ..!

அரக்கர் கூட்டம் சேர்ந்து
அடிவயிற்றில் கை வைத்தாய்
அருமை தோழர் தமை
அழிவுக்குள் அழைத்து சென்றாய்

புலி பசித்தாலும்
புல்லை திண்பதில்லை
புரியாத காலம் உனக்கு
புரிய வைத்த புலிகள் இவர்கள்

தலைவனுடன் தோழர்கள்
கழற்றி கொடுத்த
குப்பி கடித்து உனக்கு
குழி தோண்டி போன
வீர மறவர் இவர்கள்.

வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால்பிடிக்குமா..?
உணர்ச்சி வரிகளின்
உறவுகள் இவர்கள்
தீருவில் வெளியில்
தீயாகி போனார்கள்

தீயின் கணல் இன்னும்
தீராத அணலாக சுழல்வது
நீ அறியாதது
மாறாத உன் குணம்
இனியும் மாறுமா..?!!
பாத்திருக்கிறோம்

தொப்புள கொடி உறவு இது
தொடரனும் என்பது எம் ஆசை
வெட்டி தான் வாழ்வேன் என்று
நீ இருந்தால் நாம் என்ன செய்ய..?

ஒன்று மட்டு அறிந்து வை
இது உன்
விளையாட்டு களம் அல்ல
எம் விடுதலை களம்
மடியும் உயிர்களிலும்
பெரியது
எம் உரிமைகள்

">

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

வெட்ட வெட்ட வீழுகின்ற வேடந்தாங்கள் நாங்களல்ல வெட்டப்பட்டு குருதி உறிஞ்சப்பட்ட போதும் தமிழுக்காக தலை வணங்கும் தமிழருக்காக, தமிழ் உரிமைக்காக போராடும் வீர வால்கள் நாங்கள்

அருமை... வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம் என மட்டும் சொல்ல மாட்டேன் அத்தனையும் உண்மை வாழ்த்துக்கள்