29 Oct 2009

என் அவளுக்கு ஒரு மடல்..


நீண்ட பல இரவுகள்
கடந்து விட்ட நிலையில்
காத்திருக்கும் ............ எழுதி கொள்வது

என் எண்ணங்களுக்கு
பூட்டு ஒன்று பூட்டி
உன் நினைவு மறந்து
வாழ்ந்து விடுவது என்ற
எண்ணத்தில இருந்தேன்.

காலம் மாறி விட்டது இப்போது

எதிரிகள் கூட நன்பர்களாமே..??!!!!!!
வாடிய பலர் வாழ்க்கை
மீண்டும் மலர்வதாயும்
வீதிகள் எங்கும்
புன்னகை பூக்கள் பூப்பதாயும்
கேட்கிறேன்..!!!!!
உண்மையா..?

வான வெளியில கூட பருந்துகள் இல்லையாமே
பட்டாம் பூச்சிகளாய் பறப்பதாய் கூறுகிறார்கள்..

அலை பாயும் எண்ணங்களை
பூட்டி வைக்க மறுத்து
திறந்து விட்டேன்....

மூடிவைத்த இதய காகிதத்தில்
உணர்வுகளை வரிகளாக போட்டு
இந்த மடலை வரைகிறேன்..

நீ எங்கு உள்ளாய்..?
என் எண்ணம் மறந்து வாழ்கிறாயா..?
இல்லை , இவனை போல்
வெறும் தேடல் தானா..?

நான் ஒரு முட்டாள் அன்று
உன் முதுகிடம்
சொன்ன காதலை
உன் முன்னால்
உணர்த்த வில்லையே..!

இன்று நீ
நினைத்தாலும் முடியாது அது..
இருந்தும் முயன்று பார் - நான்
சொல்வதை கேட்டு

உன் வீட்டு கண்ணாடி முன்
உன் முதுகை காட்டி பார்
என் உதட்டசைவு தெரிவது உறுதி
ஏனென்றால்
நான் முகம் பார்த்து கதைத்ததை விட
உன் முதுகிடம் கதைத்தது அதிகம் அன்று

ஆனால் இன்று அப்படியல்ல..

பல வலிகளை தாண்டியவன்
“காதலை புதிய பார்வையில் பார்ப்பவன்”
புரட்சிகர எண்ணங்கள்
சீர் திருத்த கருத்துகள் பல என்னுள்ளே..

பார்த்தாயா மீண்டும்
பாதை மாறி செல்லும்
என் காதல் கடிதம் இது..

அதனால் நீயும் சிலது மாறவேண்டும்
எனக்காக நீயும் சிலதை மாற்ற வேண்டும்
அப்போது தான் இது கை கூடும்
முயன்று பார்...இல்லை முயற்சிக்கிறேன்..

அறையினுள் காற்றே இல்லை
மின்விசிறி தான் சுழல்கிறது
இதன் முலம் அனுப்பி வைக்கிறேன்

இக் கடிதம்..
உன் உச்சம் தலையில் அடித்தால்
இருமிக் கொள் ஒரு முறை
இருமல் வந்தால் உணர்ந்து கொள்
என் கடிதம் உன் கரம் சேர்ந்ததாய்
இல்லையேல்
காற்றோடு கரைந்த
ஆயிரத்தில் மற்றொன்றாய்
இதுவும் இருந்து விடட்டும்..

3 comments:

Hector's Blog said...

தயாளன், நான் உங்களைப் பிழையாகக் கணக்குப் போட்டு வைத்துள்ளேன் என்பதனை இந்தக் கவிதை மூலம் புரிய வைத்துள்ளீர்கள். நீங்கள் உண்மையான ஒரு கவிஞர் தான். சந்தேகமேயில்லை. எனது பாராட்டுக்கள் பல உரித்தாகுக. நன்றி.

Vijay said...

அழகான வரிகளில் ஆழமான கருத்துக்கள், வாழ்த்துக்கள் தயாளன்

Jayasree said...

nanraaga irukkiriradhu...