12 Nov 2009

போதும் உங்கள ஓப்பாரி பாடல்கள்..


தினம் நான் படிக்கும்
கண்ணீர் மடல்களுக்குள்
கருகிக் கிடக்குது எந்தன்
கண்ணீர் தேசம்..


எதை தொலைத்ததாய்
ஓ வென்று அழுகிறீர்கள் இங்கே


விட்டு வந்து ஊரை எண்ணியா..?
ஊட்டி வளர்த்த உறவை எண்ணியா..?


இல்லை


நட்டு வந்த கல்லரை மேல்
நரிகள் செய்யும் சேட்டைகளையா..?


எதை எண்ணி நீங்கள்
இன்னும் ஒப்பாரி பாடுகிறீர்கள்..!!

போதும் உங்கள் கண்ணீரும்
பொல்லாத ஒப்பாரி பாடல்களும்


வடித்த கண்ணீர் போதும் என்று
புது பாதை போட்ட காலம் தாண்டி
இன்றுடன் மூ பத்து ஆண்டுகள்
தாண்டி முடிச்சாச்சு


இன்னும் இங்கே
ஆயிரம் கேள்விகளுடன்
தினம் வடிக்கும் கண்ணீர் மடல்கள் தான்
அதிகம் வருகிறது

வீரம் படைத்த தலைவன் எங்கே ?
தோழ்கொடுத்த தளபதி எங்கே ?
கை கோர்த்து நடந்த எந்தன்
தோழன் எங்கே ? தோழி எங்கே ?


எங்கே எங்கே என்று
நீண்டு செல்லும்
கண்ணீர் மடல்கள் தான்
அதிகம் இ்ங்கே இன்று

விதைகள் போட்டு
விரம் வளர்த்தோம்
பகை அழித்து
ஊர் புகுந்தோம்


கண்ணீர் வடித்து
கலங்கி நின்றதாய்
கடந்த முப்பது ஆண்டுகளில்
ஓரு பதிவும் இல்லை இங்கே


பின்னர் ஏன் இன்னும் இந்த
கண்ணீர் மடல்கள் இங்கே

சாண் ஏறி முழம் ஏறி
முற்றாக மூழ்கியாச்சு
உங்கள் கைகளை
நீங்களே ஓருமுறை
நாசி வரை
நீட்டி பாருங்கள்
ரத்த வாடை அடிக்கும் ஒரு
பித்த நிலை தோன்ற வில்லை
போதும் இனியும் இந்த
இரட்டை நிலை வேடம்

எங்கள் ஊர் எமக்கு வேண்டும் என்று
உறத்து கூவும் நேரம் வந்தாச்சு
அவர்கள் செய்வார்கள் என்று
அடுப்படி இருந்த காலம் போய்
நாங்கள் செய்யும் காலம்
நம் வீடு வரை வந்தாச்சு
இனியும் என்ன கண்ணீரும்
ஓப்பாரி பாடல்களும்


குனிந்த தலை நிமிர்த்தி
புறப்பட்ட களம் தாண்டி
வடித்த கண்ணீர் துடைத்து
வாசல் தாண்டு நேரம் வந்தாச்சு
துப்பாக்கி முனைகளுக்கு
குண்டுக்கு பதில்
மையூற்றி
களம் புகுவோம்

வெற்று தாள் கொண்டு
சித்திரம் கீற
தொடங்கவில்லை நாம்
அடியிட்ட ரேகை இங்கே
தெளிவாக தெரிந்திருக்க
மேல் வரையும் ஒரு
பிரதி ஓவியம் தான்
எம் பணி மிச்சம் இங்கே


துணிந்து செய்தால்
துணிவாக படகேறலாம்




இல்லை எனில்
மீண்டும் ஒரு
யுத்த பூமி தான்
என் சந்ததி
சுமக்க வேண்டும் அங்கே


புரிந்து கொண்டு
புறப்படுவோம்
வாருங்கள்
பட்ட துன்பம்
எங்களுடன் முடியட்டும்


வாருங்கள் எல்லோரும்
ஒன்றாக வடம் பிடிப்போம்.

1 comment:

கிடுகுவேலி said...

மிக மிக எதார்த்தமான வரிகள்...இனி அழுது பலனில்லை. ஆகவேண்டியதைப் பார்க்கும் காலம். அழிவை நினைத்து நினைத்து அழுது கொண்டு இருக்க அடியோடும் எம்மை அழித்து விடுவான். அதற்கு முன்னால் ஊர்கூடி வடம் பிடிப்போம்.