1 Dec 2009

எனக்கான பாதை


எனக்கான பாதை மிக கொடியது
அங்கு இருள் அதிகம்
விளக்குகளுக்கு வேலை இல்லை
அமைதியை தவிர
யாரும் உள் நுழையக் கூட முடியாது
இது எனக்கான பாதை

புன்னகைக்கும் இந்த முகத்திரையில்
புன்னகைக்கு பின்னால் வலிகள் அதிகம்
மருந்து போட வைத்தியரும் இல்லை
அங்கே அவருக்கு அனுமதியும் இல்லை
இது எனக்கான பாதை

நானாக அமைத்து கொண்டது
தானாக அமைந்து கொண்டது
விரும்பி ஏற்று கொண்டேன்
திணிக்கப்பட்ட ஒரு காலமும் உண்டு
இது எனக்கான பாதை

நிழல்கள் தேடி நான் அமர்ந்தால்
என் இருக்கைக்கு கீழும் முற்கள் அதிகம்
வலியை பொருத்து கொண்டு இருந்துவிடுவேன்
எழும் போது அதனிலும் கொடிய வலி
இது எனக்கான பாதை

யாரை நம்பியும் நான் நடக்க வில்லை
என்னை நம்பியும் யாரும் இல்லை
நம்பி வந்தவளை நடுவழியில் விட்டவன்
இன்று யாரையும் நம்பி
அழைக்கவும் முடிவதில்லை
இது எனக்கான பாதை
வாழ்ந்து முடிக்கும் உறுதியுடன்
தொடந்து நடக்கிறேன்
எனது பாதையில்

No comments: