13 Jan 2010

தை திருநாள்


விடியாத திசைகள் இன்று
விடியட்டும்
இருளாக இருந்த வாழ்வு
வெளிக்கட்டும்
புதிதாக பிறந்ததாய் பாடுவோம்
“ தமிழர் திருநாள் ”
அழகாக விடிந்த தென்று ஆடுவோம்

கனவோடு வலம் வந்தோம் -பல
கற்பனைகள் கட்டி வைத்தோம்
தென்றலாய் இருந்த வாழ்வில்
புயல் புகுந்த பொழுதது நேற்று

நிலம் இழந்தோம் - நம்
உறவிழந்தோம்
நடுத்தெருவில் நாதியற்று
நிர்க்கதியாய் இருப்பினும்

வலுவிழந்து போயிடோம் - நம்
உணர்விழந்து மாயிடோம்

ஆரிய பெய்கள் செய்த சதி கண்டு
அடையாளம் இழந்திடோம் - நாம்
புலி அடையாளம் கொண்டெலுந்து
இங்கு புது வரலாறாய்
புறம் எழுவோம்

நமக்கான ஆண்டிது
நயமாக பிறந்ததென்று
நாட்காட்டி சொல்லாதாயினும்
நம் நா மட்டும் எடுத்துரைக்கும் - இது
நம் ஆண்டென்று
நமக்கான ஆண்டென்று

நேற்றுவரை அழுதிருந்தோம்
இன்றுடன் நிமிர்ந்தெழுவோம்
புது பானை தனில்
புதிதான நெல்அரிசி இட்டு
பொங்கலிட்டு - பெரு
படையலிட்டு
பசி தேடி வாடிநிற்கும் - நம்
பகை வாய்க்கும் பகிர்ந்தளிப்போம்

பொங்கலோ பொங்கல் என்று
பெரு ஓசை நாம் கொண்டு
பறை கொட்ட செய்திடுவோம்
பகை அதிர பாடிடுவோம்.

உணர்விழந்து போயிடோம் -நம்
உயிரழந்து மாயினும்
உணர்விழந்து போயிடோம்
“ நா ”அது கூறட்டும்
நமக்கான
ஆண்டிதென்று.

பகிர்க

2 comments:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

உணர்விழந்து போயிடோம் -நம்
உயிரிழந்து மாயினும்
உணர்விழந்து போயிடோம்

ஒவ்வொரு தமிழனும் இதை உரக்க சொல்ல வேண்டும் உணர்வோடு

வாழ்த்துக்கள் அண்ணா

Anonymous said...

" பகிர்ந்தழிப்போம்"

அழகான கவிதையில் பொருளை திரிவுபடுத்தும் எழுத்துப்பிழை இருப்பது அழகில்லை என்று கருதுகிறேன். பகிர்ந்தளிப்போம் (அளிப்போம் என்பது வழங்குதலையும் அழிப்போம் என்பது அழித்தலையும் குறிக்கும்) என்றே தாங்கள் பதிவுசெய்ய முனைந்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். என் கருத்து சரியென்றால், மாற்றிவிடுக! அழகான கவிதை முழு அழகுடன் திகழ வேண்டுமல்லவா?