3 Feb 2010

அவனும் அவளும்

அங்கோர் இருள் பிழந்து
அண்டங்கள் நுழைந்து
கண்டங்கள் கடந்து
என் உள்ளத்தை தொட்டதால்
உயிர் திறந்தேன் நான் - உன்
நுனி விரல் தீண்டலில் என்
உள்ள சிறை உடைத்தேன்
மெல்ல இதழ் விரித்தேன்
எந்தன் மொழி துறந்தேன்
உன் அழகினில் தான் - எந்தன்
சின்ன விழி திறந்தேன்

மறுகணமே

உலகமே என்னை பார்த்தது
கொள்ளை அழ கென்றது - இது
ஒர் உலக அதிசயம் வேறு சொன்னது
இப்படியும் நடக்குமா !
இதைவேறு பாடு பொருள் கொண்டது

இதில்

எதுவுமே என்னை ஈர்க்க வில்லை
அவர் பால் என்னை ஒட்டவில்லை
உன் துாண்டல் போல் - இங்கே
ஒர் துலங்கல் எனக்கில்லை
நானோ உனை பார்த்தேன்
உனை மட்டுமே பார்த்தேன்

உடனே

“ இரசாயண ” தாக்கம் என்றார்
ஜயகோ
இல்லை இல்லை இது வேறு ,
“ காதல் ” நோய் என்றார் !
எதுவுமே எனக்கு புரியவில்லை
உன் விழி பார்வை போல்

உனை பார்த்த வேளையில் நான்
விழி திறந்தது உண்மை என்றால்
அதன் பெயர் “ காதல் ” என்றால்
அது அப்படியே இருக்கட்டும்
இல்லை
துாண்டல் பட்ட வேளை வந்த
துலங்கல் என்றால்
“ இரசாயண ” தாக்கமே ,
கவலை என்ன !

நான் பேசும் வார்த்தைகள்
இவர் செவிக்கு எட்டாது
உன் பேசு மொழி இங்கே
யார் காதும் தீண்டாது
உனக்கும் எனக்கும் இருப்பது
இங்கே எவருக்கும் புரியாது
எதை நான் சொல்லி
எனை நான் காட்ட

எட்டாத தொலைவோடு நீயாம்
தரைமீது இலையாக நானாம்
யுகம் கடந்தாலும் முடியாதாம்
ஆராய்ச்சி முடிவென்று
இதை தான் தந்தார்கள்
பேதைகள் இவர்கள்

புன்னகைத்து கொண்டவன் நான்
பதில் சொல்ல துணிந்தேன்

“ நீ வந்த திசை பார்த்து
நான் விழி திறந்தேன்
நீ போகும் வழி தானே
நான் போகும் வழி என்பேன்
நீ மறையும் இடம் பார்த்தே
நான் மடிந்து போவேன் ”

அந்த ஒரு நாள் உன்னோடு
எனக்கு போதும் - அது
மறுநாள் நீ வரும் வரை
மொட்டுக்களாய் மீண்டும்
நான் இருப்பேன் இங்கே .


No comments: