14 Feb 2010

காதல்

இரவின் இருட்டு இதயத்தை மீட்கும்
நிலவு கூட எம் மொழி பேசும்
தாய்மொழியும் தள தளக்கும்
தாய் மடியும் துாக்கம் மறுக்கும்

கண்ணை மூடவும் கவிதை பிறக்கும்
உள்ளத்தின் எண்ணம் உறக்கத்தை கலைக்கும்
காப்பியங்கள் கூட ஒர் வரியில் முடியும்
திருக் குறல் மட்டும் வரலாறாய் நீளும்

மதங்கள் அங்கே மக்காகி போகும்
உள்ளங்கள் மட்டும் மலையென தோன்றும்
எல்லைகள் தாண்டி எண்ணங்கள் நகரும்
எதையும் எதிர்க்க ஆழ் மணம் குமுறும்

கனவுகளில் வந்த காட்சிகள் இனிக்கும்
கவிதைகளில் வரும் வர்ணனை பிடிக்கும்
பூக்களில் உள்ள வாசனை பிடிக்கும்
புல் நுணி கூட முள் என குத்தும்

காதல் வந்தால் இப்படி என்றால்
தொலைந்த காதலும் தொல்லை தானே
எதையும் எண்ணி இருப்பதை இழக்க
இதயம் மட்டும் இரும்பிலா என்ன.?

வலிகள் இங்கே வலியன வாகும்
வாழ்க்கை இங்கே அர்த்தங்கள் தேடும்
கண்ணில் மட்டும் கோடுகள் தோன்றும்
கனவில் மட்டுமே கண்ணீர் தோன்றும்

உள்ளத்தை மறைக்க புன்னகை தேடும்
கள்ளத்தை மறைக்க கவிதைகள் தேடும்
காதலை மறைத்து காதலை கொடுக்கும்
அங்கே காதல் மட்டும் காதலாய் இருக்கும்.

1 comment:

மயூ மனோ (Mayoo Mano) said...

அருமையான கவிதை...காதலர் தின வாழ்த்துக்கள்...