5 Jul 2010

நீங்கள் எங்கள் உயிராயுதம்

விழி மூடி நிலவுறங்க
அமைதியாய் கடல் துாங்க
வெடிசுமந்த மேனிகளாய்
விடியலை தேடிய வீரர்களே...

கண் மூடி உமை நாங்கள் வேண்டுகிறோம்
கரு வேங்கை உமை நாங்கள் போற்றுகிறோம்
உயிர் கொண்டு வெடியாகிப் போனீர்கள்
எம் கண்ணீரின் உப்பாக சேர்ந்தீர்கள்

ஒரு வேளை சாவந்து எமை தீண்டக்கூடும்
அன்று சாவிற்காய் எம் விழிகள் நீர் சிந்தக் கூடும்
சாவிற்காய் சாவையே சுமப்பவர் நீங்கள் - அங்கு
சாவிற்கே உமை தீண்ட கண்கலங்கக் கூடும்

தாய் கருவோடு உயிராக உருவாகும் போதும்
அவள் மடி மீது குழந்தைகளாய் உருமாறும் போதும்
எமை போன்று உணர்வோடு பிறந்தவரா நீங்கள்
இல்லை
எமக்கென்றே காவலராய் உதித்தவரே நீங்கள்

ஒத்திகை பார்த்து ஒத்திகை பார்த்தே
சாவிற்கு தேதி வைப்பீர்கள் - அங்கு
தப்பித்து போன சாவைக்கூட
துாரத்திச் சென்றே இடிப்பீர்கள்.,

கூடித் திரிந்த தோழருடன்
கூட விருந்து கூடி மகிழ்ந்து
குடியிருந்த குடிகளை
கும்பிட்டு மனமிருத்தி
ஊட்டி விட்ட கரங்களை
உணர்வோடு உள்ளமிருத்தி
காட்டிய இலக்கினை
இதயத்தில் சிறைப்பிடித்து
தமிழீழ தாயகமே
உங்களின் தாகமாய்
மண்ணின் விடிவிற்காய்
கண்ணிலே பொறி எடுத்து
பகையளிக்க நீங்கள் புறப்பட்டாள்
பார்த்திருந்த விழிகளில் தான்
பாசங்களின் பிடிப்பு தெரியும்..
மண்ணிலே உதித்து
மரணித்து போகையிலும்
பிடி மண்ணும் உமக்காக
கடண் கேட்பதில்லை

உங்களில்...
வாழ்ந்திடும் காலமும்
வீழ்ந்திடும் கணமும்
வரைந்திடாது போனவர் உண்டு.,
தாய்க்கும் முகம் அறியா
தாயக வித்துக்கள்
தலைவன் மட்டும் அறிந்த
வரலாரறியா வீரர்கள்.,

இன்று கண்ணீரும் கதையாகிப் போகலாம்
உம் கல்லரையும் காணமால் போகலாம்
பேர் சொன்ன துாபிகள் உருமாறிப் போகலாம்
என்றும் எம் நெஞ்சத்தில் உம் நினைவு
இடம்மாறி போகாது

ஆசைகள் ஆயிரம் இருக்கும்
ஆழமாய் உம் நினைவிருக்கும்
அலை கடலே எழுந்தாலும்
ஆனந்தமாய் நடந்திடுவோம்.
எரிமலையே வெடித்தாலும்
எதிர்த்து நடந்திடுவோம்.

No comments: