
வான் கரையில் கடலோடு சேர்ந்தும்
சேராதது போல் வாழ்வில் காதல்
உன்னோடு நானும் வேறாகிப் போயும்
போகாதது நேசம் அது நீதந்தது .
நினைவோடு நீயும் நிழலாக நானும்
இடம் மாறி நின்றும் நிற்காது
உறவென்று நாம் போட்ட கோலம்
காலம் உருமாறி, மாறாது தொடர்கின்றது
விதியோ அது சதியோ வேறாய்
திசை மாறி நாம் சென்றும்
செல்லாது சிலையாகி நிற்கின்றது உறவு
உன்னால் என்னால் பின்னால் அது தன்னால்
வேண்டாத உறவிது வேறாக நின்றாலும்
வேண்டும் என் வரவு மனம் சொன்னது
உன்னில்,அது நான் கண்டது
என்னில் நீ கண்டது எதுவோ !
உன் வாசம் சொல்லும் வார்த்தைகளும்
என் உறவென்று சொல்லும் உணர்வுகளும்
நினைவுகளில் இன்னமும் மிச்சமிருக்க
நிமிடத்தில் மாற்றத்தை ஏற்காது மனது
மாற்றத்தை ஏற்காத என் மனதும்
மனதோடு ஒட்டிய உன் நினைவும்
நிழலாக தொடர்வது தெரிந்தும் நான்
நிஜத்தினை மறைத்திட முனைவதும் ஏனோ !
விடைகளைத் தேடி விதிகளைத் தாண்டி
வரம்புகள் மீறி உறவுனை நாடி
வரும்வேளை ஒருவேளை வரும்
அது நாள் வரை உனக்கும் எனக்கும்
தொடர்புகள் அறுந்தாளும் உறவது மாறாது
No comments:
Post a Comment