8 Jan 2012

துரோகி














நாங்கள் சிறை மீண்டோம்
எமக்காய் ...
சக்கை வண்டிகள் பாயவில்லை
துப்பாக்கி குண்டுகள் சீறவில்லை
எதையும் நாம் எதிர் பார்க்கவில்லை
இருந்தும்
நாங்கள் சிறை மீண்டோம்....


பெற்றவள் உயிரை விட்டாள்
உற்றவள் உடமை விற்றாள்
குழந்தைகள் வீதியில் நிக்க
எம்மை நாமே சிறைக்குள் வைத்து
இன்று நாங்கள் சிறை மீண்டோம்


எங்கள் வரவால் - சிலர்
சிலிர்த்துக் கொண்டார் - சிலர்
சினந்து கொண்டார்
வெற்றுத்தாள்கள் விலை பேசி
வேலிகளாய்த் தடை போட்டார்


கண்ணீரின் வெள்ளத்திற்கு
கடல் நீரின் சக்தி கிடையாது
கற்பாறையில் மோதுண்டு மீண்டும்
மனச்சிறைக்குள் சிறைப்பட்டோம்


வெட்ட வெளிக் காற்றிப்போ
மூச்சுக் குழலை அடைக்கிறது
நகக்கண் இடுக்கு வழி
ஊசி முனை ஏற்றுகிறது
தோள் பற்றும் கரங்கள் எங்கள்
தேக வலி கூட்டி விட
தேடிவரும் சொந்தமெல்லாம்
துவக்கு முனை நீட்டுகிறது


எல்லைக் கற்கள் என்ற (அ)வன்
எலும்புத் துண்டென்றான்
எச்சில் இலைகள் எமை
ஏலனம் செய்யக் கண்டான்


சாவின் விளிம்பில் நின்று
சவக்குழி தோண்டுவோரே
நாளை ஓருவேளை வந்தால்
சரித்திரத்தை புரட்டிப் பாரும்
நாம் நடந்த வீதிகளை......

No comments: