17 Feb 2012

விடுதலை















பல்லினம் பலமொழி அங்கே
விடுதலை மட்டுமே பொதுமொழி
பசி என்பதைக் கூட அயலவன்
தட்டைப் பார்த்தே தெரிந்து கொள்வோம்
உறக்கம் என்பது கூட எம்
விழிகளுக்கு போடப்பட்ட பூட்டு தான்
திறவுகோள் என்னவோ கனவுகளிடம் மட்டுமே
தேசியம் பேசிய உதடுகள்
கால்களை பார்த்து திட்டித் தீர்த்தது
வலிகளை உணர்ந்தவன் அவன் ..
வழி மாற காரணமானவன் புரிந்தும்
புரியாதவனாய் ஆடிக் கொண்டே இருப்பான்

சூழந்து கொள்ளும் புகை மூட்டத்தை
இருமல் வந்து அடிக்கடி விலக்கிக் கொள்ளும்
புகைப் பிடிக்காமலேயே புகையைப் பிடிக்க
கற்றுக் கொண்டது நாசி
ஆயுளைக் குறைக்கும் என்பதால்
அவன் விரும்பிக் கொண்டானோ என்னவோ
புரியவில்லை.....!

அகப்பட்டதைக் கொண்டு கரங்கள் மட்டும்
சுவர்களுடன் தமிழில் பேசும்
இறுதியில் முற்றுப் புள்ளிக்குப் பதில்
கேள்விக் குறிகளே அதிகம் அங்கே
அன்பும் அரவனைப்பும் இல்லாமலேயே
சுவர்களோடு சுகங்களை பரிமாறிக் கொள்ளும் அவை

அங்கே ஒரு மூலையில்
கவனிப்பாரற்றுக் கிடந்தது மூளை
கடமை தவறிய அனைவரையும் பார்த்து
கேலி பேசிய கடிகாரம் மட்டும்
தன் கடமையை தவறாது செய்தது.

No comments: