19 Oct 2012

‘‘திரு” நங்கை...



ஹார்மோன்களின் கோலத்தில்
வேசங்கள் எப்போதும்
வேடிக்கைப் பேச்சுகளாய்
சந்தியில் சிரிக்கிறார்கள்
உள்ளுக்குள் அழுது கொண்டே

ஆண் என்றார்
பெண் என்றார்
அயலவர் இம்சையால்
அலி என்றார்
தீண்டத்தாகா வார்த்தையால்..

அவளுக்கும் இதயமுண்டு
அங்கே சிவப்பு அணுக்கள்
சுழற்சிப் பாதையில் சுழல
சில்லரையை வீசி எறிந்து
சுயத்தை அடையாளம் செய்கிறார்

காமத்தில் உதித்தவர் முன்
இயற்கையின் உருவத்தில்
இடரிப் பிறந்தவர்களால்
இயலுமா இவ்வுலகில் வாழ....!!
..............................

திரு...திருமதி....
அடைமொழிக்குள் அடங்கா
இவர்களும்
‘‘திரு” நங்கைகளே.......
(புகைப்பட உதவி - தமிழ்விக்கிபீடியா)

2 comments:

Yaathoramani.blogspot.com said...

புதுமையான அருமையான விளக்கம்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

மனதின் கிறுக்கல்கள் said...

என்னை ஊக்குவிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு வணக்கங்கள்