Showing posts with label எனக்குள் நான். Show all posts
Showing posts with label எனக்குள் நான். Show all posts

11 Dec 2011

சுயம்
















உதிர்ந்து போன
ஒற்றைச் சிறகு
ஓவியத்தின் துாரிகையாய்
முடிந்து போன கனவுகளுக்கு
மீண்டும்
திறப்பு விழா

4 Nov 2011

இவர்கள் ''வீரர்கள் ''














கொன்று போட்டது யுத்தங்கள்
உயிர்களை மட்டுமன்று மனித
உணர்வுகளையும் சேர்த்து.
மீளும் நாள் பார்த்து மனம்
மூழ்கிக் கிடக்குது இருளுக்குள்.

30 Sept 2011

பாவ மன்னிப்பு


ஆசையுடன் காத்திருந்து
ஆதரவாய் உறவு பெற்றாள்
அழுத வாய்க்கு உடன்
கற் கண்டு ஊட்டி விட்டாள்
பெற்றவள் கண்விழிக்கு முன்
உற்றவள் ஊருக்கு சொன்னாள்
எனக்கும் ஒரு தம்பி உண்டு

21 Jan 2011

பேசத் தெரியாத அறிவு


காற்றில் வரும் குண்டிற்கு
காதல் கிடையாது
கண்ணீர் உதவாது
உடல் தைத்த பின்னும்
அதற்கு உயிர் ஒன்றிருக்கும்

11 Aug 2010

முடிந்து போன என் மரணம்

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று
மரணத்தின் வாசலில்
பிறந்தவன் இவன்

தாய் மடி தவழ்ந்ததும்
மண் மடி புரண்டதும்
ஊர் மடி சுமந்ததும்
இவன் வாழ்வில் பக்கங்களாகின

எழுதாத வரலாற்று பக்கங்கள்
இவன் சொல்லும் பொய்களாகின
எழுதி வைத்த பல இன்று
இவன் மீது வசைகள் பாடின

உயிர் தந்து உயிர் விட்டான்
ஒருவன்
உடல் தந்து கடண் வைத்தான்
மற்றொருவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

வைப்பில் வைத்தே
வட்டி கேட்கும் நாளில்
வயிற்றில் வைத்தால்
அவள் பட்ட கடண்
பாதி இருக்க 
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன 

காலத்தால் விட்ட கடண்
ஒர் பக்க சுமையாய் இருக்க
நாட்டிற்காய் பட்ட கடண் 
மறுபக்கம் ஏறி நிற்க
இடை நடுவில் இவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று

பட்ட கடண் தீரும் வரை
தேசம் அது மீளும் வரை
தோழர் நினைவுகள் 
தோழ் கொடுக்க
மரணம் தாண்டியும்
மீண்டும் மீண்டும்
மரணத்தின் வாசலில்
பிறப்பெடுப்பான் இவன்.




முடிந்து போன என் மரணம்

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று
மரணத்தின் வாசலில்
பிறந்தவன் இவன்

தாய் மடி தவழ்ந்ததும்
மண் மடி புரண்டதும்
ஊர் மடி சுமந்ததும்
இவன் வாழ்வில் பக்கங்களாகின

எழுதாத வரலாற்று பக்கங்கள்
இவன் சொல்லும் பொய்களாகின
எழுதி வைத்த பல இன்று
இவன் மீது வசைகள் பாடின

உயிர் தந்து உயிர் விட்டான்
ஒருவன்
உடல் தந்து கடண் வைத்தான்
மற்றொருவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

வைப்பில் வைத்தே
வட்டி கேட்கும் நாளில்
வயிற்றில் வைத்தால்
அவள் பட்ட கடண்
பாதி இருக்க 
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன 

காலத்தால் விட்ட கடண்
ஒர் பக்க சுமையாய் இருக்க
நாட்டிற்காய் பட்ட கடண் 
மறுபக்கம் ஏறி நிற்க
இடை நடுவில் இவன்
இதற்குள் இல்லாத எனக்கு
இன்று பிறப்பென்ன

என் மரணம் அன்றே
முடிந்து போன ஒன்று

பட்ட கடண் தீரும் வரை
தேசம் அது மீளும் வரை
தோழர் நினைவுகள் 
தோழ் கொடுக்க
மரணம் தாண்டியும்
மீண்டும் மீண்டும்
மரணத்தின் வாசலில்
பிறப்பெடுப்பான் இவன்.


16 Dec 2009

எனது தனிமை



எங்கோ ஒரு மூலையில்
என் கேள்விகளுக்கான பதில்
இன்னும் புதைந்து கிடப்பதாகவே
நான் எண்ணிக் கொள்கிறேன்.

கேள்விகள் பல கேட்டு
வாழ்ந்த காலங்கள் போய்
இன்று
விடைகளைத் தேடி நாடிச் செல்கிற
விசித்திர மனது இது

மேலிருந்து சிந்தும் அந்த
கண்ணீர் மழைத்துளி சத்தத்துள்
அமைதியான என் உலகம்
அதை இழந்து தவிப்பதை உணர்ந்து கொள்கிறேன்

மின்குமிழ் வெளிச்சத்தில் கூட
கனவுகள் வரும் என்று
அந்த ஒரு நொடி
அடையாளம் காட்டி சென்றது எனக்கு

திக்கற்று ! சுழன்று திரிந்து
சின்னதாய்
ஒரு சிரிப்புலகைத் தேடிப் பிடித்து
அதன் துணையாய்
கூடவே
கண்ணீரையும் கூட்டி வரும்
என் சிந்தனை ஓட்டம் இனிமேலும் வேண்டாம்

யாரும் இல்லா ஒரு விசித்திர உலகத்துள்
நானும் என் கேள்விகளும் மட்டும்
நடை போட்டோம் விடைகளை தேடி..

எங்கோ ஒரு மூலையில் அது
இன்னும் புதைந்து கிடப்பதாகவே
எண்ணிக் கொள்கிறேன்.

6 Dec 2009

விடியாத விடியல்

விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள் இங்கே


தினம் தினம் விழி மடல் திறந்து
தெருவெளி பார்க்க
அங்கே
உதிர்ந்து போன சருகுகள்
என் விழிநீரை கடன் கேட்பதும்
கடன் கொடுத்தே கரைந்து போன விழிகள்
கனவுகளை தேடுவதும்
என்று இப்படியாக
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்
இங்கே

யார் அழைத்தும் குரல் கேட்பதில்லை
அங்கே நிறைந்து கிடக்கிறது
அன்று விட்டு போன அந்த
அழு குறல்
இது நிறைந்தே செவிகள் இங்கு
புலன் அற்று புழுங்கி தவிக்கிறது
புலனாகிறது எனக்கு
இதனால் என்றும்
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

தடை தாண்டித் தடை தாண்டி
தழும்பேறி இங்கே
தவிக்கிறது தடையுடைத்த கைக் கருவி
கை பிடித்துக் கூட நடந்து
கழற்றி விட்ட உறவு அங்கே
கை வலிக்க கை ஏந்தும் நிலை பார்த்து
தவிக்கிறது தடையுடைத்த கைக் கருவி
இதனால் என்றும் எனக்கு
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

ஓய்வின்றி ஒடி திரிந்து
ஓர் வழி பார்த்து ஓரிடம் கண்டு
ஓய்வெடுத்தால் அங்கே
ஓலமிடும் ஓர் குரல் கதறல்
ஓய்வெடுத்த மறுகணமே ஓடச் சொல்ல
இதனால் என்றும்
விடிந்தும் விடியாததாக இருக்கிறது
எனது விடியல்கள்

இருந்தும் தெரிந்தும்
இன்றும் மீண்டும்
விடியாத இந்த விடியலுக்குள்
நான் மீண்டும் விளையாட தொடங்குகிறேன்

விடியாதா விடியாதா என்றிருந்தால்
விடியாத விடிவு ஆகிப்போய் விடும்
என்று
எனக்குள் ஒரு முடிவோடு
எனக்கான விளையாட்டை நான்
தினமும் விளையாட தொடங்கிவிடுவேன்.

விடியல் எனக்கும் தெரியும் என்ற
நம்பிக்கையுடன்.



4 Dec 2009

துடைத்து எறிவோம் துணிந்து எழுவோம்


கண்ணீரை கடன் கேட்டு
இருளுக்குள் உனை அழைக்கும்
காப்பாற்றும் எண்ணத்தை
குழி தோண்டி அது புதைக்கும்
நினைவுகளை கிண்டி விட்டு
நிலைகுழைய செய்து வைக்கும்
உறக்கத்தை அது தடுத்து
மன உளைச்சலை
கொடுத்திருக்கும்


விழிகளில் வடிகின்ற
விழி நீர் மடல் திறந்து
விடைகொடுங்கள் வலிகளுக்கு


இதயத்தில் வடிகின்ற
குருதியை புணல் இட்டு
நெருப்பிடுங்கள் நினைவுகளுக்கு


சுற்றி வந்து சுயத்தை கேட்டால்
புன் சிரிப்போடு பதில் கொடுங்கள்
சுற்றத்திற்கு


சுட்டெரிக்கும் சூரியனாய்
சுடர் பரப்பும் சுவாலைகளாய்
சுயமாக நின்றிடுங்கள்


எட்டெடுத்து நடை நடந்து
எதிர் வரும் இடர்களுக்கு
சட்டென்று பதில் கொடுப்போம்


சத்தங்கள் எதுவும் இன்றி
சமரசங்கள் உதவி இன்றி
இடர்களை உடைத்தெறிவோம்
மன உளைச்சல் எமக்கிருந்தால்
மன வலிமை குன்றிப்போகும்


மன வலி குன்றி போக
உடல் வலிமை அற்று போகும்


வலி கொண்டு வழி செய்ய
துடைத்து எறிவோம் இன்றே
உடல் வலி(மை ) நாம் பெற
துணிந்து எழுவோம் நன்றே

1 Dec 2009

எனக்கான பாதை


எனக்கான பாதை மிக கொடியது
அங்கு இருள் அதிகம்
விளக்குகளுக்கு வேலை இல்லை
அமைதியை தவிர
யாரும் உள் நுழையக் கூட முடியாது
இது எனக்கான பாதை

புன்னகைக்கும் இந்த முகத்திரையில்
புன்னகைக்கு பின்னால் வலிகள் அதிகம்
மருந்து போட வைத்தியரும் இல்லை
அங்கே அவருக்கு அனுமதியும் இல்லை
இது எனக்கான பாதை

நானாக அமைத்து கொண்டது
தானாக அமைந்து கொண்டது
விரும்பி ஏற்று கொண்டேன்
திணிக்கப்பட்ட ஒரு காலமும் உண்டு
இது எனக்கான பாதை

நிழல்கள் தேடி நான் அமர்ந்தால்
என் இருக்கைக்கு கீழும் முற்கள் அதிகம்
வலியை பொருத்து கொண்டு இருந்துவிடுவேன்
எழும் போது அதனிலும் கொடிய வலி
இது எனக்கான பாதை

யாரை நம்பியும் நான் நடக்க வில்லை
என்னை நம்பியும் யாரும் இல்லை
நம்பி வந்தவளை நடுவழியில் விட்டவன்
இன்று யாரையும் நம்பி
அழைக்கவும் முடிவதில்லை
இது எனக்கான பாதை
வாழ்ந்து முடிக்கும் உறுதியுடன்
தொடந்து நடக்கிறேன்
எனது பாதையில்