Showing posts with label காதல் நினைவுகளுடன். Show all posts
Showing posts with label காதல் நினைவுகளுடன். Show all posts
28 Jan 2013
ஏக்கங்கள்...
நிமிடங்களாச்சும் அவள் மடியில்
துாங்கி எழ தலை சாயும்
என் தோள்கள் வலுக்கூடி
அவள் கரங்களை சுமக்க ஏங்கும்
விரல்கள் அவள் தொடுகைக்கும்
விழிகள் அவள் வருகைக்குமாய்
தவிக்கும் ....
இதழ் விரித்த மலராக
புன்னகை பூத்த உதடுகள் விரித்து
‘‘ அன்பே ” எனக் கூவும்
உன் அழைப்பிற்காய்
நிமிடங்கள் மணிகளாக
நாட்கள் சேர்ந்து வருடங்களாய்
காத்திருப்பேனடி
என்.......
23 Oct 2012
நெற்றிப் பொட்டில்...
உன் நெற்றிப் பொட்டில்
என் நிமிடங்கள்
இறுக ஒட்டிக் கொண்டது
விழிகளில் துாக்கங்கள்
கரையக் கரைய
விடிய விடிய ரசிக்கிறேன் என்
இரவிற்குத் துணையாய்
17 Oct 2012
21 Sept 2012
நீரும் நிலவும் ....
விம்பத்தின் தோற்றம் மட்டும்
நீரோடு நிலவுக்கு
உறவென்று ஆகாது
சட்டத்தின் சாட்சிகள் ஒன்றே
அவனுக்கு அவளென்ற
உரிமையை கோராது
20 Sept 2012
இரவு..
இருள் எனும் போர்வைக்குள் இந்த
உலகும் நானும் துாங்குகிறோம்
மேகப் போர்வைக்குள் ஒழியும்
நிலவின் வருகைக்காய் எப்போதும்
எனது விழிகள் காத்திருக்கும்...
15 Sept 2012
காதல்..
தீண்டல்களையும் தாண்டி தீப்பிடிக்கும்
மௌனங்களும் மொழிகளாக்கும்
மௌனங்களும் மொழிகளாக்கும்
நிழல்கள் சேர்ந்து உருவங்களாகும்
‘‘ காதல் ”
‘‘ காதல் ”
3 Sept 2012
உன்னைத் தேடுகிறேன்....
விரல்களிடை சேரும் மறு விரல்களாக அல்ல....,
வலிகனத்த தலைசாயும் வெற்று மடிகளாக அல்ல...,
எந்தன் ஈரவிழி மூடும் அந்த இமைகளாகவுமல்ல.....,
நாளை விடியும் என்ற என் கனவை சுமக்கும்
கருவறையாய் நீ இருப்பாய் என்றே
உனை தினம் தேடுகிறேன்.
31 Aug 2012
உன் மௌனங்கள்..
இரவின் மௌனத்திற்குள்
இருளின் அடர்த்திக்குள்
உறங்கிக் கிடக்கிறது
நிலவின் பெருமை...
அது
உன்னைப் போல்
உந்தன் உணர்வைப் போல்...
தனக்கான வார்த்தைகளை
பேச மறுக்கிறது,
நிலவைப் பார்த்து
நினைவை மீட்பவன் போல்
உன்னைப் பார்த்து
உந்தன் மௌனங்களை
தேடிப் படிக்கிறேன்..
20 Apr 2012
பிரளயம்.....
இயற்கையில் நிகழும் பிரளயம் ஒவ்வொன்றும்
மறு உதயத்தின் அத்தியாயம்
அதுவே உனக்கும் எனக்கும்
அவிழ்க்க முடியா முடிச்சுகளாய்
உறவின் அடையாளமாய்
1 Feb 2011
உனக்கும் எனக்கும்
14 Feb 2010
காதல்
இரவின் இருட்டு இதயத்தை மீட்கும்
நிலவு கூட எம் மொழி பேசும்
தாய்மொழியும் தள தளக்கும்
தாய் மடியும் துாக்கம் மறுக்கும்
கண்ணை மூடவும் கவிதை பிறக்கும்
உள்ளத்தின் எண்ணம் உறக்கத்தை கலைக்கும்
காப்பியங்கள் கூட ஒர் வரியில் முடியும்
திருக் குறல் மட்டும் வரலாறாய் நீளும்
மதங்கள் அங்கே மக்காகி போகும்
உள்ளங்கள் மட்டும் மலையென தோன்றும்
எல்லைகள் தாண்டி எண்ணங்கள் நகரும்
எதையும் எதிர்க்க ஆழ் மணம் குமுறும்
கனவுகளில் வந்த காட்சிகள் இனிக்கும்
கவிதைகளில் வரும் வர்ணனை பிடிக்கும்
பூக்களில் உள்ள வாசனை பிடிக்கும்
புல் நுணி கூட முள் என குத்தும்
காதல் வந்தால் இப்படி என்றால்
தொலைந்த காதலும் தொல்லை தானே
எதையும் எண்ணி இருப்பதை இழக்க
இதயம் மட்டும் இரும்பிலா என்ன.?
வலிகள் இங்கே வலியன வாகும்
வாழ்க்கை இங்கே அர்த்தங்கள் தேடும்
கண்ணில் மட்டும் கோடுகள் தோன்றும்
கனவில் மட்டுமே கண்ணீர் தோன்றும்
உள்ளத்தை மறைக்க புன்னகை தேடும்
கள்ளத்தை மறைக்க கவிதைகள் தேடும்
காதலை மறைத்து காதலை கொடுக்கும்
அங்கே காதல் மட்டும் காதலாய் இருக்கும்.
3 Feb 2010
அவனும் அவளும்
அங்கோர் இருள் பிழந்து
அண்டங்கள் நுழைந்து
கண்டங்கள் கடந்து
என் உள்ளத்தை தொட்டதால்
உயிர் திறந்தேன் நான் - உன்
நுனி விரல் தீண்டலில் என்
உள்ள சிறை உடைத்தேன்
9 Dec 2009
நீ அறியா உண்மைகள்
நான் உடைந்து விழும் அந்த
ஒரு துளி நிமிடங்களில்
எனக்கான இலைகளாய் நீ இருப்பது
இயற்கையின் நியதி எனில்
விழும் எனை தாங்கும் உந்தன்
இலை என்னும் கைகளில்
எனக்கான விடுதலை
புதைந்து விடுவது
நீ அறியாதது உண்மையே
தினம் இங்கே சில்லிட்டு பெய்யும் இந்த
சில்லென்னும் குளிர் காற்றில்
சிறகடித்து பறந்து வரும்
சில சிற்றின்ப கனவுகளில்
என் உறக்கத்தை மகிழ்விப்பது
உன் புன்னகை என்பதும்
உன் புன் நகைகளில் என்
கண் இமைகள் காய்ந்து போவது
நீ அறியாதது உண்மையே
கரும் புகை வாங்கும் நீண்ட இந்த
தெருவோர மர நிழல்களில்
ஒரு தரம் இரு(க்)கை போடும்
என் தனிமைகளில்
என் ஒரு கை பாடும்
தேன் இசை மெட்டுக்களாய்
உன் மெல்லிசை குரல் ஓசை
இதம் தந்து போவதும்
என் இதயம் வந்து போவதும்
நீ அறியாதது உண்மையே
அறிவு க்கும்
அறி யாமைக்கும்
எடை போடும் இந்த
இய லாமைக்கும்
நிலைக்காத நினைவுகளாக
நினைவில் அழிந்து போய் விட
நீ அறியா உ்ணமைகளை நான்
அறிந்ததாய் காட்டி கொள்கிறேன்
இன்று.
ஒரு துளி நிமிடங்களில்
எனக்கான இலைகளாய் நீ இருப்பது
இயற்கையின் நியதி எனில்
விழும் எனை தாங்கும் உந்தன்
இலை என்னும் கைகளில்
எனக்கான விடுதலை
புதைந்து விடுவது
நீ அறியாதது உண்மையே
தினம் இங்கே சில்லிட்டு பெய்யும் இந்த
சில்லென்னும் குளிர் காற்றில்
சிறகடித்து பறந்து வரும்
சில சிற்றின்ப கனவுகளில்
என் உறக்கத்தை மகிழ்விப்பது
உன் புன்னகை என்பதும்
உன் புன் நகைகளில் என்
கண் இமைகள் காய்ந்து போவது
நீ அறியாதது உண்மையே
கரும் புகை வாங்கும் நீண்ட இந்த
தெருவோர மர நிழல்களில்
ஒரு தரம் இரு(க்)கை போடும்
என் தனிமைகளில்
என் ஒரு கை பாடும்
தேன் இசை மெட்டுக்களாய்
உன் மெல்லிசை குரல் ஓசை
இதம் தந்து போவதும்
என் இதயம் வந்து போவதும்
நீ அறியாதது உண்மையே
அறிவு க்கும்
அறி யாமைக்கும்
எடை போடும் இந்த
இய லாமைக்கும்
நிலைக்காத நினைவுகளாக
நினைவில் அழிந்து போய் விட
நீ அறியா உ்ணமைகளை நான்
அறிந்ததாய் காட்டி கொள்கிறேன்
இன்று.
13 Nov 2009
காதல்
என் கையில் என் முகம் தெரிந்தது
எதற்கும் ஒரு புன்னகை வந்தது
எங்கும் ஒரு வாசனை இருந்தது
எதற்கும் ஒரு காரணம் தெரிந்தது
அங்கே ஒரு அமைதி இருந்தது
அருகே செல்ல அதிசயம் இருந்து
அங்கே எனக்கொரு இதயம் இருந்தது
அசைத்து பார்க்க ஆசை இருந்தது
தொட்டு பார்த்தேன் சிலிர்த்து கொண்டது
தொடர்ந்து பார்த்தேன் சொர்க்கம் தெரிந்தது
எண்ணி பார்த்தேன் வியப்பாய் இருந்தது
எனக்கு கொஞ்சம் இதமாய் இருந்தது
வேண்டும் என்று இதயம் சொன்னது
வேண்டாம் என்று அறிவு சொன்னது
வேடம் போட்டு அறிவை மறைத்தேன்
விருப்பத்தோடு இதயம் திறந்தேன்
கண்ணை மூடி இருட்டில் நடந்தேன்
கவிதை வடித்து கதவை திறந்தேன்
காத்திருந்து கையை பிடித்தேன்
காதல் என்று சொல்லி சிரித்தேன்
சேர்ந்தே இருவரும் சிறகை விரித்தோம்
சொர்க்கம் தேடி சேர்ந்து பறந்தோம்
சேரும் இடம் வந்த போதும்
சேரா திருந்து காதல் செய்தோம்
காதல் என்றால் இது தான் என்று
காத்திருந்து அறிந்து கொண்டோம்
கடவுள் என்ற ஒன்றை கூட
தள்ளி வைத்து காதல் செய்தோம்
வரமாய் வந்த உறவு அது
வரம் தந்து இதம் தந்தது
வாழ்க்கை முழுதும் அருகே இருத்த
வாயை திறக்க வார்த்தை தடுத்தது
நேரம் வந்ததும் பிரிவு வந்தது
நேரத்தோடு அழுகை வந்தது
எதை சொல்லியும் இதயம் மறுத்தது
ஏற்க சொல்லி அறிவு சொன்னது
வேசம் போட்டு இதயம் மறைத்தேன்
பிரிவை கூட சுகமாய் ஏற்றேன்
அவளை சுமப்பதாய் என்னை சுமந்தேன்
எனக்கு நானே சுமையாய் இருந்தேன்
திரும்பி பார்த்தேன் இருட்டாய் இருந்தது
தொலைவில் பார்த்தேன் தோல்வி சிரித்தது
எண்ணி பார்த்தேன் நடந்து முடிந்ததை
எழுதிப் பார்த்தேன் நடக்க போவதை
எல்லாம் ஒரே வியப்பாய் இருந்தது
என்ன செய்ய தவிப்பாய் இருந்தது
மீண்டும் ஒரு முறை கையை பார்த்தேன்
என் கையில் என்முகம் தெரிந்தது
மீண்டும் ஒரு வாசனை தெரிந்தது
எதற்கும் ஒரு காரணம் தெரிந்தது
சிரித்து கொண்டு எழுந்து நடந்தேன்
“ காதல் என்பதை ” புரிந்து கொண்டேன்
“ காதல் ...........”
“ காதல் என்பதை ” புரிந்து கொண்டேன்
“ காதல் ...........”
27 Oct 2009
வலி..
காலத்தின் கைகளில் உண்டாம்
வலி தனை போக்கும் மாத்திரை
புரிய வில்லை எனக்கு - என்
வலி இன்னும் என் மனதில்
வலிகளோடு வாழ்வது தான்
வாழ்க்கை என்றால்
எற்கத்தான்
வேண்டும் என்றால்
ஏற்று கொள்வேன் - உன்போல்
ஒரு கை அதை
துடைக்க வரும் போது
புரியாத உறவு
இது அறிந்தவர்கள்
புரிந்து கொள்வார்
வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே
புரிந்து கொள்ளும்
புரிந்தவன் நீ என்பதாள்
கை கொடுத்தாய் - இன்று
கவி கொடுத்தாய்
தொலைத்தவிட மாட்டேன்
புரியாத உன் உறவை
இது வலிகள் தந்த
வார்த்தைகள் கற்பனைகளில்
வருவதில்லை புரிந்து கொள்
17 Oct 2009
காதல் நட்பு...
அன்புக்கு மறுபெயர்
காதல் என்றால்
என் அகராதியில்
காதலின் ஒத்த சொல்
நட்பு
அன்பில்லா நட்பு
உன்னது என்றால்
உயிரற்ற உடலை
நீ ஏன் சுமக்கிறாய்..??
உடல் இ்ச்சைக்கு மறு பெயர்
காதல் என்றால்
தீயிட்டு கொழுத்து அந்த
காதலை
வாருங்கள் ஒன்றாக சேர்ந்து
இடித்து போடுவோம்
அந்த காதலின் சின்னங்களை
ஆணுக்கு ஆணும்
பெண்ணிற்கு பெண்ணும்
காட்டும் அன்புக்கு பெயரே
நட்பு என்றால்
எந்த வரையறையுள்
இணைப்பாய் நீ
ஒரு பால் உறவை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பெண்ணுக்கு ஆணுமாய்
உள் இழுக்கும் உள் ஈர்ப்பை
நட்பும் காதலுமாய்
நீ பிரிப்பதென்றால்
வரையறைக்குள் சிக்காது
என் காதல்
நான் ஆணையும் காதலித்தேன்
ஒரு பெண்னையும் காதலித்தேன்
என் தாயையும் காதலித்தேன்
என் தேசத்தையும் காதலித்தேன்
இன்று உன்னையும் காதலிக்கிறேன்
உன் தமிழையும் காதலிக்கிறேன்
என்னையும் காதலிப்பதால் தான்
இன்றும் நானாக வாழ்கின்றேன்
இதில்
எதில் கோர்ப்பாய் நட்பை
எதை பிரிப்பாய் காதலாய்
நட்பும் காதலும்
இரு விழிகள் இங்கே
ஒரு விழி போதும் என்றால்
உன் வழியில் தெளிவில்லை
இருவிழியும் வேண்டும் என்றால்
என் கைகோர்த்து நட என்னோடு
இருவிழியை கொண்டு
ஒரு வழி நடப்போம்
அழகாக
Subscribe to:
Posts (Atom)
.bmp)









