Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

11 Sept 2009

மாகவி பாரதி
























என் தமிழ் வளர்த்த
எட்டயபுரத்து வேங்கையே
உன்நினைவுகளில்
இன்று ஒரு நாள்...

விடுதலை வாசல் தேடி
நீ அலைந்த தெருக்களில் தான்
இன்னும் எம் தமிழ்
“படுத்துறங்குது” பாராய்

நாவில் வாளெடுத்து
நீ தொடுத்த யுத்தம்
கையில் வாளெடுத்தும்
நீண்டு தொடருது கேளாய்

கனவுலகில் நீ கண்ட தோற்றம்
நிஜவுலகில் வெகு தொலைவில்
வேற்றுமையால் பிரிந்திருக்கும்
உன் தமிழை
ஒற்றுமையில் சேர்த்திழுக்க
நீ வரவேண்டும் பிறந்து..