Showing posts with label மண்ணின் நினைவுகளுடன். Show all posts
Showing posts with label மண்ணின் நினைவுகளுடன். Show all posts

28 Apr 2013

துரோகம்


நான் ..,
கைது செய்யப்படாத வரை - என்
விரலின் நகக் கண்கள் வழி

10 Mar 2013

நினைவுகளுடன்..



இது கதையல்ல !
நிஜம்,
கனவல்ல !
ஓர் காவியம்.
நீருக்கும் நிலவுக்கும் மட்டுமே தெரிந்த
இரகசியம் .

3 Mar 2013

அன்புள்ள நண்பனுக்கு ..



அவர்கள் அந்த மண்ணில் வீழும் வரை
அது அவர்களுடையதாகவே இருந்தது
அவர்கள் மரணங்களின் பின்னால் - அது
அவன் பாதங்களின் கீழ் - அவர்கள்
உடலை தாங்கும் புதை குழிகளானது..

கைகளில் அகப்படாத கடிதங்களாய் பல கதைகள்
அங்கே புதையுண்டு போயிருக்கும்
நாளைய தேடலில் உடலின் எச்சங்கள்
உக்கியே மறைந்தாலும்
உணர்வுள்ள கடிதங்கள் நிச்சயம்
அவர்கள் வரலாறு சொல்லும்....

1 Mar 2013

விடுதலை ....!


விடுதலைக்கு....
வேர்களைக் கொடுத்து
விழுதுகள் இன்றி - வாடி
வீழ்கின்றது
ஆல மரங்கள்.

21 Nov 2012

விழிகள்....

‘‘நீ” இல்லா நினைவுகளால்
‘‘நா” வறண்டு 
‘‘மண்” புழுவாய்ச் சுருண்டு
‘‘மண்ணை”க் குடைகின்றோம்.

‘‘தாகத்தை” தணிக்கும் - நீர்த்
தேக்கத்தை தேடி
மலையைக் குடைந்து 
மனதை புரட்டி
‘‘மண்ணோடு மனதுக்கும்”
மறுவாழ்வு தேடுகின்றோம்.

28 Oct 2012

வானவில் வீரர்கள்


வெள்ளை மணல்
வேர்களை
இறுகப் பற்றுவதில்லை
இருந்தும் கால்கள் 
நிலையாக நின்று கொண்டது ,
விடுதலை என்பது தாகமானால்
காதலும் கண்ணீரும் 
அலைகளாய்ச் சூழ்ந்திருந்தாலும்
போர்க்குணம் மட்டும் 
விழிகளில் தாண்டவமாடும் .

9 Oct 2012

மண்ணின் நினைவுகள்..




இருண்ட மேகத்தின் கரியதிரைச் சீலைக்குள்
புதைந்து கிடக்கிறது கண்ணீர்...
கிழக்கே சூரியனின் உதயம் பார்த்து
காலமும் ஏங்கிக் தவிக்குது....
காயங்களைச் சுமந்து வலுவிழந்த மேய்ச்சல் நிலம்
விதைத்தலை எதிர் பார்க்கிறது....
சுவடுகள் அழிந்தாலும் அவர்கள்
மண்ணோடு தான் கலக்கிறார்..
எங்கள் மனதோடு வாழ்கிறார்.

30 Sept 2012

‘‘மண்ணில் வீழா மழைத்துளி...”




செந்நீரும் கண்ணீருமாய் கொடுத்து
மண்மீது நாம் ஓர்
பெருமழைக்காய் காத்திருந்தோம்..
வேள்வித்தீயில் கருக்கொண்ட விண்மேகம்
இடைநடுவில் புகுந்த பெருங்காற்றாள்
தன் கற்பம் கலைந்தது - அந்த
‘‘மண்ணில் வீழா மழைத்துளிக்காய்”
இன்றும் விண்ணைப் பார்த்தபடி 
காத்திருக்கிறோம் நாங்கள் .

17 Feb 2012

விடுதலை















பல்லினம் பலமொழி அங்கே
விடுதலை மட்டுமே பொதுமொழி
பசி என்பதைக் கூட அயலவன்
தட்டைப் பார்த்தே தெரிந்து கொள்வோம்
உறக்கம் என்பது கூட எம்
விழிகளுக்கு போடப்பட்ட பூட்டு தான்
திறவுகோள் என்னவோ கனவுகளிடம் மட்டுமே

8 Jan 2012

துரோகி














நாங்கள் சிறை மீண்டோம்
எமக்காய் ...
சக்கை வண்டிகள் பாயவில்லை
துப்பாக்கி குண்டுகள் சீறவில்லை
எதையும் நாம் எதிர் பார்க்கவில்லை
இருந்தும்
நாங்கள் சிறை மீண்டோம்....

15 Dec 2011

எரிமலை...















இருள் போர்த்த மேகத் திரைகளின் பின்னால்
தேங்கிக் கிடக்கிறது எங்கள் கண்ணீர்
குருதி வழிந்தோடிய கரைகளைத் தழுவி
காத்துக் கிடக்கிறது எங்கள் கரங்கள்

13 Dec 2011

சாட்சி














எங்கள் கருவறைகள் சிதைக்கப்பட்டு
நாங்கள் வன்புணரப்பட்டோம் - இருந்தும்
அழுவதை தவிர்த்துக் கொண்டோம்

27 Nov 2011

மாவீரர்














கல்லரை வீரர்கள் கண்திறப்பார்கள் அவர்
கனவுகள் கலைவதில்லை
உயிரோடு கலந்திட்ட உறவுகள் ஒருபோதும்
எமைவிட்டுப் போவதில்லை

4 Nov 2011

வீரனே உனையின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை....


















பாடித் திரிந்த குயிலொன்று
பாடையில் வீழ்ந்தது.
விடுதலை மூச்சொன்று
வேள்வியில் வித்தாகிப் போனது.
கண் முன்னே இவை எல்லாம்
கனவென்று ஆகாதோ!
கண நேரம் எம் கண்கள்
உனை இங்கே காணாதோ!

18 Oct 2011

ஆழ்கடல் உண்மைகள்......














ஆழ்கடல் உண்மைகளாய் பலகதை இங்கு
இருட்டினில் தான் உறங்கும்
அது ஊரறியாது உலகறியாது என்றும்
ஊமையாய் தான் உறங்கும்

12 Sept 2010

தொடரும் எம் பயணம்......


அன்றொரு பயணம்.....
இடர்மிகு பயணம் இருந்தும்
இலக்குடனேயே தொடர்ந்தோம்
வழியெங்கும் குருதியின் எச்சங்கள்
வாசனை வயிற்றை குடைந்தாலும்
விடுதலைக்கு என்று
வீராப்பாய் நடந்தோம்....

24 Aug 2010

வற்றாது விடுதலைத் தாகம்

விடுதலை பா பாடித்திரிந்த வீதிகளில்
வேரறுந்த பெருமரம் ஒன்று
சாய்ந்து கிடப்பதால்
வேட்கை மட்டும் என்ன
தணிந்தா போய்விடும்..!!

கந்தக வாசனையும்
இரத்த வாடையும் தான்
விதைகளின் அறுவடை என்று
காற்றின் போக்கிற்கு 
தாளம் பாடி செல்வோரை
தப்பு சொல்லி என்ன பயன்

வேண்டா விடுதலை என்று
வீராப்பாய் நீ சொன்னாலும்
வேண்டும் உயிர்கள் இன்றும்
வாழத்தான் செய்கின்றது

விரும்பி நானும்
வன்முறையை தொட்டதில்லை
தாய் மடியும் 
தாலாட்டு பாடலும்
எனக்கும் தான் இதமானது
அதையும் தாண்டி
என்மீதான உங்கள் முத்திரை
என் துாக்கத்தை கெடுத்ததை
யாரறிவர்..!!

போர் ஒன்றின் கோரக் கரங்களுள்
பெரு நகரொன்று புதர் பற்றி கிடப்பதும்
ஒற்றை பனை நடுவானில்
வட்டிழந்து வாடி நிற்பதும்
தீ யின் நாக்குலால்
தீய்ந்து போன உயிர்கள் இங்கே
தனிமை சிறைகளில் 
தவம் கிடப்பதும் எதற்காக

இது விடுதலை வேண்டும் காலம்
வலிகள் மட்டுமே
மலிவு விலையில் கிடைக்கும்
புன்னகை என்பது - எங்களின்
புண்களின் மீதான போர்வைகளே
இருந்தும்....

தாயின் கண்ணீரும் - என்
தாரம் சிந்தும் செந்நீரும்
எனக்கான வேட்கையை 
தணிக்கும் என்றும் 
எள்ளளவும் எண்ணாதீர்


13 Aug 2010

செம்மண்ணில் ஒரு செஞ்சோலை...

செவ்வரத்தை பூக்கும் எம் மண்
செங்குருதியால் சிதறிக்கிடந்தது,
பூக்களும் பிஞ்சுகளுமாய்
கருகிப் போனதெம் 
அழகிய தோட்டம் !
வானேறி வந்து நீ
எம் வம்சம் அழிக்க
முடிவு செய்தாய்
எத்தனை துணிவிருக்கும்
உன் எண்ணத்தில்,
பார்த்துக் கொண்டு
நாம் என்ன
பாடை சுமப்போம்
என்று மட்டும் எண்ணினாயா..!!!!
போட்ட குண்டு பூமி தொட்டதும்..
பூக்கள் அங்கே கருகி மாண்டதும்..
ஒற்றைச் செய்தியாக.,
புயல்களை அடக்கி
அங்கே
உள்ளங்களில் பூக்கள் துாவியதாய்
மேடை போட்டு நீ மேதாவி ஆனாய்.
காட்சிகளும் சாட்சிகளுமாய்
பக்கம் பக்கமாய் கண்ணீராய்
நாம் கொடுத்தும்
கண்மூடிக் கிடந்ததே உலகு..

என்ன உலகமடா என்று
எள்ளவும் நினையாமல்,
உள்ளம் முழுதும்
உறுதியை துாவி
காட்டாற்று வெள்ளம் என
ஓர் அணி
படைகொண்டு எழுந்தது.
விடுதலை வேண்டும் பூமியது,
வீரத்தை மட்டுமே விதைத்தோம்.
கண்ணீரை காட்டி
நாம் என்ன,
பன்னீரா கேட்டோம்
குடிப்பதற்கு.
செந்நீரைப் பாய்ச்சி அங்கே,
செம்மண்ணில் தோட்டம் செய்தோம்.
விளைச்சல் மட்டும் என்ன
வெங்காயமா வரும் !!

கனவு கண்ட நீ,
கண்கள் திறக்கும் முன்னமே
கரு வேங்கைகள் உன்
கண்ணுக்குள் விரல் விட்ட கதை
நீ மறைத்தாலும்
வரலாறு மறக்காது.
சிங்கத்தின் குகைக்குள்
சிறுத்தைகளின் கும்மாளம் கண்டு
சினம் கொண்ட வல்லுாறுகள் இங்கே
பொல்லாத கதைகள் சொல்லி
புலிகளையே அழித்த செய்தி
இன்று எம் முன்னே..

நீ புலிகளை அழிக்கலாம் !!
எம் பூக்களை எரிக்கலாம் !!
ஆனால்,...
சுடர் விட்டெரியும்
விடுதலையை அணைக்க முடியாது.
அடக்க அடக்க
அடங்கிப் போகும்
இனமல்ல நாம்,
முடக்க முடக்க
முடங்கி போபவர்களும் அல்ல,
முட்களுள் இருந்தாலும்...
முள் வேலிக்குள் இருந்தாலும்..
மூச்சுக்கு முன்னுாறு முறை
விடுதலையை மட்டும்
சுவாசிக்க விரும்புபவர்கள்.
நினைவில் வை..

காலங்களின் போக்கில்
இன்னும் காட்சிகள் மாறும்,
கணக்கில் வை,...
விடுதலை மூச்சு
அடங்கி போனதாய்
வரலாற்றில் எங்கேனும்
ஓர் பக்கத்தில் இல்லை
நாம் மட்டும் என்ன
விதிவிலக்க ,..!!!
போராடி தோற்றோமே ஒழியே
போராடத் தயங்கவில்லை,
இன்னும் இங்கே
பூக்கள் பூக்க வில்லை,,
புயல்களுக்கான அமைதி ஒன்றே
கோலமிட்டு கிடக்கிறது,
புரிந்து கொள்வாய் சீக்கிரமே.

8 Jul 2010

கருவறைக் கதைகள்

கருவறைக் கதவு தட்டி
கண் விழித்த என் குழந்தை
சாட்சிகளாய் மாறும் முன்னர்
காட்சிகளாய் கலைந்து போனது


பெறாமல் பெற்ற குழந்தை
பேர் சொல்ல வளர்த்து வந்தேன்
பேச வாய் திறக்கும் முன்னர்
மூச்சடங்கி போனது


புலியின் குகைக்குள்ளே
புள்ளி மானாய் வளர்த்து வந்தேன்
புது உலகை படைக்க வேண்டி
பல கலைகள் கற்று வைத்தேன்


புன்னகைத்து அவள் அனுப்பும்
புகைப்பட காட்சிகளுக்குள்
சொர்க்கத்தை காண்பிப்பாள்
சொந்தங்களை காண்பிப்பாள்


வாழும் ஆசையுடன்
கோலமிட்டேன்
கோலங்கள் காயும் முன்னர்
கோலங்கள் கலைந்ததங்கே


நெருப்பெடுத்து வந்த பகை
நிஜங்களை சுட்டு போட
நான் அறிந்த பல கதைகள்
நினைவுகளாய் மாறியதின்று


கறுத்து தடித்த
போர் மேக கூட்டங்களுள்
கருகிப் புதைந்ததென்
கருவறை கதைகள்


5 Jul 2010

நீங்கள் எங்கள் உயிராயுதம்

விழி மூடி நிலவுறங்க
அமைதியாய் கடல் துாங்க
வெடிசுமந்த மேனிகளாய்
விடியலை தேடிய வீரர்களே...

கண் மூடி உமை நாங்கள் வேண்டுகிறோம்
கரு வேங்கை உமை நாங்கள் போற்றுகிறோம்
உயிர் கொண்டு வெடியாகிப் போனீர்கள்
எம் கண்ணீரின் உப்பாக சேர்ந்தீர்கள்

ஒரு வேளை சாவந்து எமை தீண்டக்கூடும்
அன்று சாவிற்காய் எம் விழிகள் நீர் சிந்தக் கூடும்
சாவிற்காய் சாவையே சுமப்பவர் நீங்கள் - அங்கு
சாவிற்கே உமை தீண்ட கண்கலங்கக் கூடும்

தாய் கருவோடு உயிராக உருவாகும் போதும்
அவள் மடி மீது குழந்தைகளாய் உருமாறும் போதும்
எமை போன்று உணர்வோடு பிறந்தவரா நீங்கள்
இல்லை
எமக்கென்றே காவலராய் உதித்தவரே நீங்கள்

ஒத்திகை பார்த்து ஒத்திகை பார்த்தே
சாவிற்கு தேதி வைப்பீர்கள் - அங்கு
தப்பித்து போன சாவைக்கூட
துாரத்திச் சென்றே இடிப்பீர்கள்.,

கூடித் திரிந்த தோழருடன்
கூட விருந்து கூடி மகிழ்ந்து
குடியிருந்த குடிகளை
கும்பிட்டு மனமிருத்தி
ஊட்டி விட்ட கரங்களை
உணர்வோடு உள்ளமிருத்தி
காட்டிய இலக்கினை
இதயத்தில் சிறைப்பிடித்து
தமிழீழ தாயகமே
உங்களின் தாகமாய்
மண்ணின் விடிவிற்காய்
கண்ணிலே பொறி எடுத்து
பகையளிக்க நீங்கள் புறப்பட்டாள்
பார்த்திருந்த விழிகளில் தான்
பாசங்களின் பிடிப்பு தெரியும்..
மண்ணிலே உதித்து
மரணித்து போகையிலும்
பிடி மண்ணும் உமக்காக
கடண் கேட்பதில்லை

உங்களில்...
வாழ்ந்திடும் காலமும்
வீழ்ந்திடும் கணமும்
வரைந்திடாது போனவர் உண்டு.,
தாய்க்கும் முகம் அறியா
தாயக வித்துக்கள்
தலைவன் மட்டும் அறிந்த
வரலாரறியா வீரர்கள்.,

இன்று கண்ணீரும் கதையாகிப் போகலாம்
உம் கல்லரையும் காணமால் போகலாம்
பேர் சொன்ன துாபிகள் உருமாறிப் போகலாம்
என்றும் எம் நெஞ்சத்தில் உம் நினைவு
இடம்மாறி போகாது

ஆசைகள் ஆயிரம் இருக்கும்
ஆழமாய் உம் நினைவிருக்கும்
அலை கடலே எழுந்தாலும்
ஆனந்தமாய் நடந்திடுவோம்.
எரிமலையே வெடித்தாலும்
எதிர்த்து நடந்திடுவோம்.