Showing posts with label காணும் கண்களே கூறும் கருத்தென்ன. Show all posts
Showing posts with label காணும் கண்களே கூறும் கருத்தென்ன. Show all posts

26 May 2013

வாழ்தல் ..


எனக்கான உலகம் அது
ஒத்து வாழ்வதிலும் - உங்களுடன்
ஒதுங்கி வாழ்தல் எனக்கழகு

30 Dec 2012

அன்பு ...


கரம் கொடுத்தேன் நீ துாங்க
நீ வரம் கொடு நான் துாங்க
நீ விழி மூடும் நேரமங்கு - நான்
விழி திறந்து காத்திருப்பேன்
கொஞ்சம் மாற்றித் தான் பார்ப்போமே
மானமா போய்விடும் என்ன ..;)


3 Dec 2012

வலிகள் ..


கற்களாய் வலிகள் அங்கே
கனவுகளாய் வாழ்க்கை இங்கே
நாளைய விடியலின் மாற்றத்தில்
எங்கள் கனவுகளின் தேசத்தை - இந்த
கற்களில் மீண்டும் எழுப்பலாம்
வலிகளை வலிமையாய்ச் சுமப்போமா ...

6 Oct 2010

பசி !!


" PULITZER PRIZE " winning photo taken in 1994 during the Sudan famine.

கேவின் கார்ட்டர் என்ற புகைப்பட கலைஞனின் கருவியின் வழி உள்வாங்கப்பட்ட இக் காட்சி Pulitzer என்ற விருதை பெற்றுக் கொண்டது. இருந்தும் இக் காட்சியை உள்வாங்கிய அந்தக் கலைஞன் தன் இயலாமையை எண்ணி தற்கொலை செய்து கொண்டான்.


உலகம் உன்னை கை விட்டது
ஒளி படக் கருவி 
கண் வைத்தது
அங்கே கழுகின் விழிகளில் 
ஈரமில்லை
எங்கள் கண்ணிலும் ஈரமில்லை
அங்கே பசியின் வேட்கை
இங்கே பணத்தில் வேட்கை
உன்னை உயிராய் வாங்கியவன்
உலகில் இன்றில்லை
மனிதம் தன்னை கொலை செய்து
வாங்கி கொண்டது
பரிசு மட்டுமே
வாங்க அவனும் இல்லை
பார்க்க நீயும் இல்லை..

3 Oct 2010

வறட்சி..!


வரண்டு விட்ட உயிரைச்சுமந்தும்
விரட்டிவரும் கருமேகம் கண்டும்
துவண்டு விட்டதில்லை நாம்
ஒருபோதும் 
துவண்டு விட்டதில்லை
கருவாக உனைச்சுமந்து கடல்தாண்டி
வந்தாலும் பிரசவம் காணும் வரை
துவண்டு விடுவதில்லை நாம்
ஒருபோதும்
துவண்டு விடுவதில்லை

29 Sept 2010

கவிதையே தெரியுமா !!!


எழுத்துக்களாய் உனை வடித்தேன்
என் உயிர் கொண்டு உணர்விட்டேன்
கட்டித் தழுவும் நேரம் எங்கும்
கற்பனையில் உனை காதலித்தேன்
இந்த உறவுக்கு பிரிவில்லை
இந்த உறவுக்கு பகையில்லை
இந்த உறவுக்கு மரணமில்லை
என்னை உயிர் பிரியும் வரை

26 Sept 2010

உன்னை உருக்கி !!!


உயிரை திரியாக்கி
உறவை ஊக்கியாக்கி
எமக்காய் உருகிப் போனாய்
உரிமைக்காய்
கருகிப் போனாய்
விரலுடுக்கில் வீக்கங்களாய்
இன்னும் வலிக்கிறது
உன்னை சுட்ட
தீயின் வலி
சூழந்து நிற்கும் இருளுக்குள்ளும்
வெளிச்சங்களாய் தெரிகிறாய்
விடுதலைக்கு வழி விட்டு
தொடர்ந்து பார்க்கிறேன்
என்னை தீ
தீண்டும் வரை
நம்பிக்கையோடு இரு
அண்ணா   ...!!!

23 Sept 2010

பூவா!! தலையா!!


நிகழ்தகவாய் வாழ்க்கை
நிமிடத்துள் மாறிப் போகும்
நிஜமான நாடக மேடையில்
நடிகரும் நாமே 
ரசிகரும் நாமே
“ பூவா ” .....
“ தலையா ” ....
இன்றே சுண்டி பார்போம்
நாளையைப் பற்றியு
நிகழ்தகவுடன்.

19 Sept 2010

துாக்கம்....


நாளை என்கிற குறிப்புகளுடன் 
இன்று உறங்க செல்கிறாய்
என்னைப் பற்றிய 
நினைவுகள் இன்றி...
என் குறிப்புகளில் இன்று.....
உன்னையும் குறித்து வைக்கிறேன்.
நாளை !!
இதுவும் கடந்து போகும்.

16 Sept 2010

பச்சை !!!


இலைகள் தாங்கும் உலகமிது
பூக்களை மட்டுமே பறிக்காதீர்
‘‘ இலைகள் ” எம்மையும் தான்
கிள்ளி எறியாதீர்

12 Sept 2010

உன்னை எண்ணி...


திசைக் கொன்றாய் 
திரும்பியிருந்தாலும்
மௌனங்களாய் 
ஆழ்மன உணர்வுகள் 
தொட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
புரிந்து கொண்டேன்
மூளைக்கு
பொய் சொல்லத் தெரியாது.

9 Sept 2010

ஊடகம்....


உயர்த்திப் படித்த முனை
உரிமைகள் கேட்டது
தலை சாய்ந்து
உண்மைகள் சொல்வதாய்
உயிரையும் கொன்றது

4 Sept 2010

ஒரு விதை...


நீர்த் துளி வடிவில் 
உயிர் துளி ஒன்று
கருவாகி 
மெல்லென உருவாகி 
கண்ணாடிச் சிறை 
தன்னில் சிறைப்பட்டு
விடுதலை வேண்டி இங்கே
விடுகதையாய் காத்திருக்கு.....

2 Sept 2010

நினைவில் மெழுகு


உள்ளுக்குள் நினைவுகளை வைத்து
உணர்வுகளை மெழுகில் வைத்தோம்
பற்ற வைத்தோம் தீயை
பற்றிக் கொண்டதும் 
உருகி கொண்டது
உங்கள் நினைவுகளாளே
பிரிவின் வடுக்களாய்
பின்னாலில் மிஞ்சி நிற்கும்
உருகி வீழ்ந்த
மெழுகின் கண்ணீர்

1 Sept 2010

மானுட நீதி



துள்ளித்திரியும் தாவித்திரியும்
தள்ளி வைத்தே தவளை என்போம்
அழுக்கென்போம் அரவணைக் 
மறந்திருப்போம்
தோழில் விழுந்தவனை சுமந்து கொண்டது
சுத்தம் பார்க்கல அதன் சுகம் பார்க்கல
அக்கரைக்கு போனதும் அக்கறையின்றி
அடுத்தவழி தேடிக் கொண்டாலும்
தப்பாமல் சுமந்து கொண்டது
சுகமாக ஏற்றுக் கொண்டது
நானும் நீயும் ஒர் இனம் என்று.
மனிதனும் மறந்து போன
மானுட நீதியை
உங்களிடம் கண்டு கொள்கிறோம்


அன்பால் ஒரு உறவு கட்டி
ஆலமராய் குடிசை கட்டி
ஒன்றாக மகிழ்ந்திருப்போம்
உறவாக கலந்திருப்போம்
கண்ணீரில் பங்கெடுப்போம்
புன்னகையை பகிர்ந்து கொள்வோம்.,
அழகான வாழ்வே இதுவென்று
அடுத்தவர் புகழ்ந்திருக்க
வாழ்ந்திருப்போம்
கவி படி மகிழ்ந்திருப்போம்.

நிஜமான ஒரு கவிதை



உள்ளங்களில் வஞ்சம் இல்லை 
அன்பிற்கு
உலகத்தில் பஞ்சம் இல்லை
நிஜமான ஒரு கவிதை
நிழல் படமாக இங்கே

அன்பிறகும் ஒரு அன்பு




அன்பிற்கும் ஒரு அன்பு வேண்டும்
அடையாளமாய் ஒரு நட்பு வேண்டும்
உயிருக்கும் மேலாய் உயிரை சுமக்கும்
ஒரு உறவு வேண்டும் 


வாழ்விற்கும் ஒரு இனிமை வேண்டும்
வீழ்ந்தாலும் ஒரு உவமை வேண்டும்
மரணத்தின் வாசலிலும்
மங்காத ஒரு தோள் வேண்டும்

18 Aug 2010

காதல் பறவைகள்




வருந்திப் பெற்றவை வழி மூடி போயினும்
விழி மூடிப் போகா “ காதல் பறவைகள் ” இங்கே
அன்பு மொழி பேசக் காண்டேன்
மினுக்கங்கள் மீறி சுறுக்கங்கள் சூழ்ந்தும்
நெருக்கத்தில் காதல் விழி விரிப்பினில் மின்ன
காமத்தை தொலைத்த முத்தங்கள் கூட - மன
நெருக்கத்தைக் காட்ட - நாம்
வழி அறிந்தோம் இன்றே
காதலாய் வாழ.